கட்டுப்பாட்டு விலை நீக்கம் - அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு..! - Sri Lanka Muslim

கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு..!

Contributors

4 அத்தியாவசிய பொருட்களுக்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சீமெந்து, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளை நீக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team