கணினி பட்டப்படிப்பிற்கு 10,000 மாணவர்கள் இணைக்கப்படுகின்றனர், விண்ணப்பிக்கலாம்..! - Sri Lanka Muslim

கணினி பட்டப்படிப்பிற்கு 10,000 மாணவர்கள் இணைக்கப்படுகின்றனர், விண்ணப்பிக்கலாம்..!

Contributors

கணினி அறிவியல் (Computer Science) பட்டப்படிப்பிற்காக இம்முறை 10,000 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இவர்கள் ஒரே தடவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சையில் எந்தவொரு பாடப்பிரிவிலும் சித்தியடைந்த மாணவர்கள் இந்த பட்டப்படிப்பிற்காக விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்த வகையில், இப்பட்டப்படிப்பு முன்னெடுக்கப்படுமென பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

தற்போது, நாட்டில் கணினி அறிவியல் துறையுடன் தொடர்புடைய 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைய, தற்போது பட்டப்படிப்பில் இணைத்துக்கொள்ளப்படுபவர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

முதலாம் ஆண்டிலிருந்தே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், மாணவர்கள் பாடநெறியை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team