கண்டிச் சம்பவத்தில் பின்னணியாக இருந்த இரு MPகளின் பதவிகள் பறிப்பு » Sri Lanka Muslim

கண்டிச் சம்பவத்தில் பின்னணியாக இருந்த இரு MPகளின் பதவிகள் பறிப்பு

A Sri Lankan man rides his bicycle past a burnt vehicle a day after anti-muslim riots erupted in Digana, a suburb of Kandy on March 7, 2018.
Sri Lanka on March 5 declared a nationwide state of emergency to quell anti-Muslim riots that have killed at least two people and damaged dozens of mosques and homes, a minister said. "The cabinet of ministers decided on tough measures, including a 10-day nationwide state of emergency," Minister of City Planning Rauff Hakeem said as police imposed a curfew in the riot-hit central district of Kandy.
 / AFP PHOTO / STR

Contributors
author image

இக்பால் அலி

கண்டி மாவட்டத்தில் இனவன்முறைச் சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள கூட்டு எதிர்கட்சியினுடைய ஸ்ரீ. சு. கட்சியின்  இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களளுடைய கட்சி அங்கத்துவத்தை இல்லாமற் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு திட்டமிட்டுள்ளதாகத் சிங்களப் பத்திரிகை தெரிவிக்கின்றது.

சிங்களம், தமிழ் , முஸ்லிம் ஆகிய  பல்லின மக்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற தேசிய கட்சி ஸ்ரீ சு கட்சியாகும். கட்சியில் இனவாத முத்திரையை குத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்பது கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும்.

பொலிஸ் விசாரணையின் போது இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்தப்படுபவர்களாயின் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு  கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்மார்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டி வன்முறை தொடர்பாக அந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த கெபினட் அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் கவனத்திற் கொண்டு வந்தார். அதன் பின்னர் தீர்மானம் எட்டப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka