கண்டிச் சீமையிலே' நூல் வெளியீட்டு நிகழ்வு - Sri Lanka Muslim

கண்டிச் சீமையிலே’ நூல் வெளியீட்டு நிகழ்வு

Contributors
author image

A.S.M. Javid

சுகவாழ்வு ஆசிரியர் சட்டத்தரணி இரா.சடகோபனின் ‘கண்டிச் சீமையிலே’ நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவை பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் நடைபெற்றது.

 

மலையக எழுத்தாளர் மன்றம் மற்றும் வீரகேசரி நிறுவனம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மலையக எழுத்தாளர் சங்க தலைவர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் இது நடைபெற்றது. பேராசிரியர் சோ.சந்திரசேகரன் இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

வீரகேசரி வெளியீட்டின் பத்தாவது வெளியீடான இந்நூல் மலையக தமிழ் மக்கள் இலங்கையின் கோப்பித் தோட்டங்களில் தொழில் புரிவதற்காக 1820களில் முதன் முறையாக அழைத்து வரப்பட்டதையும் அதன்பின் வந்த ஏழு தசாப்த காலங்களில் அவர்கள் எவ்வாறு இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைக்க தம் வியர்வையையும் இரத்தத்தையும் இறுதியில் உயிரையும் அர்ப்ணித்தார்கள் என்பதை பதிவு செய்யும் ஒரு வரலாற்று ஆவணமாகும்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் சக்தி சுப்பர் சிங்கர் செல்வி  ஷாலினி யோகநாதன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

 

வரவேற்புரையை செல்வி ஷாலினி சடகோபனும், தலைமை உரையை மலையக எழுத்தளர் மன்ற தலைவர் தெளிவத்தை ஜோசப்பும், நூல் வெளியீட்டுரையை வீரகேசரி நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.ரீ.தயாளனும் நூல் அறிமுகவுரையை சு.முரளிதரனும் நிகழ்த்தினார்கள்.

 

இதன்போது நிகழ்வுக்கு முன்னிலை வகித்த புரவலர் ஹாசிம் உமரிடமிருந்து நூலின் முதற்பிரதியை லிட்டில் ஏசியா எம்போரியம் தலைவர் ஆர்.பி.எஸ்.ராமசாமி ராஜரட்ணம் பெற்றுக் கொண்டார்.

 

பிரதம அதிதி உரையை சோ.சந்திரசேகரன் நிகழ்த்தினார். நூலாய்வினை சமூக ஆய்வாளரும் விமர்சகருமான எம்.வாமதேவனும் கருத்துரையை மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் நிகழ்த்தியதுடன் ஏற்புரையை நூலாசிரியர் இரா.சடகோபன் நிகழ்த்தினார். கல்வி அமைச்சின் உதவிக்  கல்வி பணிப்பாளர் திருமதி கிறேஸ் சடகோபனின் நன்றியுரையுடன் நிகழ்வு முடிவுற்றது.

 

நூல் வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் அமைச்சர்; பி.பி.தேவராஜ் உட்பட பலர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டதுடன் அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

01

 

03

 

02

 

04

 

05

.

Web Design by Srilanka Muslims Web Team