கண்டி மாவட்டத்தில் போக்குவரத்து காட் அட்டையைச் செலுத்தி பிரயாணம் » Sri Lanka Muslim

கண்டி மாவட்டத்தில் போக்குவரத்து காட் அட்டையைச் செலுத்தி பிரயாணம்

ll66

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

இலங்கையில் பொதுமக்கள் போக்குவரத்துக்காக கண்டி மாவட்டத்தில் போக்குவரத்து காட் அட்டையைச் செலுத்தி பிரயாணம் செய்யும் ்முறையை ஜனவரி 16ஆம் திகதி கண்டி மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்படும். இதற்காக ரீலோட் மூலம் காட் செலுத்தி தனியார், மற்றும் போக்குவரத்து சபை பஸ்களில் பிரயாணம் செய்யும் முறைமை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேற்படி காட் அட்டை முறை இன்று (11) ஜனாதிபதியின் செயலாளா் யு. பி அபேயக்கோண் அவா்களினால் இன்று கொழும்பு சிக்மா கட்டிடத்தில் வைத்து ஊடகவியலாளா் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இம்முறைமையை ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆலோசனைக்கேற்ப பொதுப் போக்குவரத்து ஒரு முறையானதொரு சட்ட ஒழுங்குகள் சிறந்த சீரான சேவையை கடைபிடிப்பதற்கு கலந்துறையாடல் பரிச்சாத்தமாக இம்முறையான ”சகசர” ஒன்றிணைந்து, என்ற திட்டம் கண்டி மாவட்டத்தில் காட் முறைமை போக்குவரத்து முறை கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையில் கடுகன்னாவ- கண்டி கண்டி- திகன வரையிலான தனியார் பஸ்கள் காட் முறையில் பொது மக்கள் போக்குவரத்து செய்ய ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இம்முறையை அறிமுகப்படுத்தப்பட்டபோது தனியார் பஸ் உரிமையாளா்கள், சாரதிகள், நடத்துனர்கள் எதிா்ப்பு தெரிவித்தாலும் சிறுகச் சிறுக அவா்கள் இத்திட்டத்தில் இணைந்து தற்பொழுது இத் திட்டம் கண்டி மாவட்டத்தில் வெற்றியளித்துள்ளது. இதனை மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா, மாத்தளை போன்ற இடங்களிலும் விஸ்தரித்து சகல தணியாா் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களும் காட் முறைமையில் இணைந்து கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண போக்குவரத்து சபையின் தலைவா் எரிக் விரத்தின தெரிவித்தாா்.

2015ஆம் ஆண்டு மட்டும் இலங்கை எரிபொருளுக்காக 600 பில்லியன் ரூபாய் செலவளித்துள்ளது. அத்துடன் 5 இலட்சம் வாகனங்கள் இறக்குமதி செய்துள்ளது. அதற்காக 185 பில்லியன் ருபா செலவளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 35 பில்லியன் ரூபாய் வாகான உதிாிப்பாகங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது.

. சகசார முறைமை அறிமுகப்படுத்தியதன் 350 பஸ்கள் இணைந்து ஒரு நாளைக்கு 20 மில்லியன் லாபமீட்டி மாதாந்தம் 50 இலட்சம் ரூபாய் இலாபமீட்டப்பட்டுள்ளது. சாதாரணமாக கடுகண்னாவையில் இருந்து கண்டி செல்லுவதற்கு தனியார் பஸ்களில் 1 மணித்தியாலயம் செலவிடப்படுகின்றது. இந்த முறைமையினால் தற்பொழுது கடுகன்னாவ – கண்டி செல்வதற்கு பஸ்களில் 20 நிமிடமே செல்கின்றது. பஸ் வண்டிக்குள் சீ.சீ.டி கமரா பொருத்தப்பட்டுள்ளது., பஸ்கள் முந்தி எடுத்துல், பஸ்நிலையங்களில் பிரயாணிகளை ஏற்றுவதற்காக தரித்து நிற்றல் போன்ற முறைமை இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. சகசார முறையை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனா். இம்முறைமை நாடு முழுவதிலும்  அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலளாா் அபயோக்கோன் –

இம்முறை வெற்றி v1 மணித்தியாலயம் செல்லும் பஸ் இத்திட்டத்தினால் 20 நிமிடம் செல்வதாகவும் சகல பிரதேச செயலாளா்களும் தனக்கு அத்தாட்சி படுத்தியுள்ளனா். இதனால் சாதாரண பொதுமக்களுக்கு இலகுவாகவும் நேரம் மிச்சப்படுத்தி தமது கடமைகளை நேர காலத்தோடு செயல்படுத்த முடியும்.

இத்திட்டத்தினை முதல் தடவையாக கண்டி மாவட்டம் முழுவதும் செயல்படுத்துவதற்கு ஆங்காங்கே தனியார் பஸ் உரிமையாளா்கள், நடத்துனர்கள் எதிா்ப்பு தெரிவித்தாலும் இம்முறையினால் ஒட்டு மொத்தமாக சகசஸசர ”ஒன்றினைந்து என்ற திட்த்தின் கீழ் வந்தால் பிரயாணிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாகனத்தை கொள்முதல் செய்யாமல் பொதுப் போக்குவரத்துறையில் நாடுவாா்கள். தற்பொழுது பொதுப் போக்குவரத்து 2015 ஆம் ஆண்டு 65 வீதத்தில் இருந்து 40 வீதத்திற்கு குறைந்துள்ளது.

ஒவ்வொருவத்தரும் முச்சக்கர வண்டி, மோட்டா் சைக்கில், காா் பாவிக்கும் முறை அதிகாரித்துள்ளது. ஆகவே அரசாங்கம் பாதைகள் அபிவிருத்திக்கு பாரிய பணம் செலவழிக்கப்படுகின்றது. வாகாணங்கள் அதிகாிப்பினால் பாதை முழுவதிலும் வாகன நெரிசல் ஏற்படுகின்றது. எனவும் ஜனாதிபதியின் செயலாளா் அபயக்கோன் அங்கு தெரிவித்தாா்.

Web Design by The Design Lanka