கண்ணதாசன் சொன்ன கதை... (இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ற கதை) - Sri Lanka Muslim

கண்ணதாசன் சொன்ன கதை… (இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ற கதை)

Contributors

எமதர்மன் சித்திரகுப்தனிடம் ‘இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்து விடு’’ என்று சொன்னான்.

அது போல் சுமார் ஆயிரம் நாக்குகளை அவன் அறுத்துக் கொண்டு வந்தான்.

அறுத்த பின்னாலும் சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. சில நாக்குகள் மரத்துப் போய் இரு கூராகப் பிளந்து கிடந்தன.

‘’மரத்துப் போய் இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் யாருடயவை?’’ என்று கேட்டான் எமதர்மன்.

‘இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் ஆளும் கடசிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு! துடித்துக்கொண்டிருக்கும் நாக்குகளெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு!’ என்றான் சித்திரகுப்தன்.

‘’ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்ற நாக்குகள்?’’ என்று கேட்டான் எமன்.

‘’அவர்களுக்கு ஓட்டுப போட்டவர்களுடைய நாக்குகள்’ என்று அமைதியாகச் சொன்னான் சித்திரகுப்தன்

Web Design by Srilanka Muslims Web Team