கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை அவதூராக எழுதிய முகநூல் பதிவை பகிர்ந்த (Share) காரைதீவு பிரதேச சபை தவிசாளரை வன்மையாக கண்டிக்கின்றேன்..! - Sri Lanka Muslim

கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை அவதூராக எழுதிய முகநூல் பதிவை பகிர்ந்த (Share) காரைதீவு பிரதேச சபை தவிசாளரை வன்மையாக கண்டிக்கின்றேன்..!

Contributors

கடந்த பல வருடகாலமாக இன ஒற்றுமையோடு வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் தமிழ் மக்களின் உறவை சீர் குலைப்பதற்கு எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை அவதூராக எழுதிய முகநூல் பதிவை பகிர்ந்த (Share) காரைதீவு பிரதேச சபை தவிசாளரை வன்மையாக கண்டிக்கின்றேன்…

கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஜ.எம் அப்துல் மனாப்

உலகில் உள்ள 1.8 பில்லியன் முஸ்லிம்கள் மனமார உயிரை விடவும் மேலாக நேசிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை நிந்திக்கும் விதத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வீட்டுடில் இடம்பெற்ற ஹிசாலினியின் மரண சம்பவத்தை தொடர்புபடுத்தி ஒழுக்கமற்ற ஒரு நபரால் முகநூலில் கீழ்த்தரமாக பதிவிடப்பட்டிருந்தது…

தனது குறுகிய அரசியல் இலாபத்திற்காக கிரிஸ்ணபிள்ளை ஜெயசிறி அவர்கள் முகநூலில் பகிர்ந்துள்ளார். மேற்படி பதிவை முகநூலில் பதிவேற்றிய கேடுகெட்ட ஒருவனுக்கு துணைபோனது மட்டுமல்லாமல் தனது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காக முஸ்லிம் சமூகம் தமது உயிரை விடவும் மேலாக நேசிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி ஒரு சமூகத்தை அவமதித்துள்ளார்…

இந்த விடயம் தொடர்பில் காரைதீவு தவிசாளர் கிரிஸ்ணபிள்ளை ஜெயசிறி தான் சுயநினைவுடன் செய்த குற்றச்செயலுக்கு முஸ்லிம்களிடத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என வேண்டிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் இந்த நிகழ்வு தொடர்பில் பலர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை செய்துள்ளனர். ஒரு சமூக தலைவரை இழிவு படுத்தியதற்காக காரைதீவு பிரதேச சபை தவிசாளரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பத்தன் அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களின் நன்மதிப்பையும் பெற்றுக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் உட்பட அனைவரும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்…

Web Design by Srilanka Muslims Web Team