கத்தாருடனான ராஜதந்திர உறவைத் துண்டிப்பதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு - Sri Lanka Muslim

கத்தாருடனான ராஜதந்திர உறவைத் துண்டிப்பதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

EDITED BY DEEDAT NAWFER


கத்தார் தொடர்ந்து இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால் தங்களது உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அரபு நாடுகளும் அறிவித்துள்ளன.

வளைகுடா நாடான கத்தார் இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவளித்து தீவிரவாதத்தை வளர்ப்பதாகக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவை தெரிவித்துள்ளன.

இதுபற்றி விளக்கமளித்துள்ள பஹ்ரைன், ”ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளின் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்தும், நிதியுதவி செய்தும் கத்தார் தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது.

பஹ்ரைனில் குழப்பத்தை ஏற்படுத்தவும், நாசவேலைகளை மேற்கொள்ளவும் ஈரானியக் குழுக்களுக்கு கத்தார் நிதியுதவி அளிக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளது.

ஏமனில் நடந்துவரும் போரில் இருந்து கத்தார் படைகள் விடுவிக்கப்படும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா கத்தாருடனான ஆகாய மற்றும் கடல் வழி மார்க்கப் பயணத்தை நிறுத்தத் நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பிற மூன்று நாடுகள் நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது இந்த முடிவு கத்தார் ஏர்வேய்ஸ் நிறுவனத்தை மிகையான அளவுக்கு பாதிக்கும் என்று நம்பப்படுகிறது.

அபுதாபி அரசின் எடிஹாட் விமான நிறுவனம் கத்தார் நாட்டுக்கான சேவையைத் துண்டித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை முதல் அபுதாபியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்குச் செல்லும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்படும் என அபுதாபி அரசு அறிவித்துள்ளது.

மேலும் ராய்ட்டர்ஸ் செய்தியின் படி, பிற மூன்று அரபு நாடுகள் கத்தார் நாட்டவர்களையும் வதிப்பவர்களையும் தங்கள் நாட்டை விட்டு இரு வாரங்களிலும் கத்தார் ராஜா தந்திரிகளை 48 மணி நேரங்களிலும் வெளியேற உத்தரவிட்டுள்ளன.

அரபு நாடுகளின் முடிவு குறித்து கத்தார் இதுவரை அதிகாரபூர்வ கருத்து தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

qat

Web Design by Srilanka Muslims Web Team