கத்தார் உலகக்கோப்பை : 'தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்' - Sri Lanka Muslim

கத்தார் உலகக்கோப்பை : ‘தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்’

Contributors

கத்தாரில் 2022ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுவரும் தொழிலாளர்கள் பாரிய அளவில் சுரண்டப்படுவதாக கத்தார் கட்டுமான நிறுவனங்கள் மீது மனித உரிமை நிறுவனமான, அம்னெஸ்டி இண்டர்னேஷனல் குற்றம் சாட்டியிருக்கிறது.

பல தொழிலாளர்கள் ஆபத்தான பணி நிலைமைகள், மோசமான குடியிருப்புகள் மற்றும் பல மாதங்கள் சம்பளம் தரப்படாத நிலை ஆகியவைகளை எதிர்கொள்கிறார்கள் என்று அம்னெஸ்டி ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறது

 தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை போதிய அளவு அமல்படுத்த கத்தார் ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள் என்று அது கூறுகிறது.

இதே போன்ற குற்றச்சாட்டுகளை ஐநா மன்றமும் கூறியது.

தாங்கள் இந்த சட்டமீறல்களை சமாளித்து வருவதாக கத்தாரி அதிகாரிகள் வலியுறுத்துகிறார்கள்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஒரு தொழிலாளர்கள் உரிமைப் பிரகடனமும் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.bbc

Web Design by Srilanka Muslims Web Team