கத்தார் உலக கிண்ண பிராஜெக்டில் உயிர் இழக்கும் வெளிநாட்டு பணியாளர்கள்! - Sri Lanka Muslim

கத்தார் உலக கிண்ண பிராஜெக்டில் உயிர் இழக்கும் வெளிநாட்டு பணியாளர்கள்!

Contributors

images (3)

கத்தாரில் 2022-ம் ஆண்டு உலகக் கிண்ணம் போட்டிகளுக்காக தற்போது நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களில், சுமார் 4,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, வாரத்துக்கு சுமார் டஜன் பேர்கள் என்ற வீதத்தில், இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர்.

2022-ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளுக்கான ஸ்டேடியம், தங்கும் விடுதிகள், உணவகங்கள் என பலதரப்பட்ட கட்டுமானப் பணிகள் கத்தாரில் நடைபெறுகின்றன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

பணிபுரியும் இடங்களில் உள்ள சுகாதாரக் கேடு, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமை காரணமாக இந்த மரணங்கள் சம்பவிக்கின்றன என ஊகிக்கப்படுகிறது. ஆனால், அதற்கு சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

ITUC (International Trade Union Confederation) வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, இந்த கட்டுமான பணிகளில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்களில் ஆண்டுக்கு சுமார் 600 பேர்வரை உயிரிழக்கும் போதிலும், அவர்கள் இறப்புக்கான காரணத்தை ஆராய பிரேத பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை.

இவர்களில் பெரும்பாலானோர், பணிபுரியும் இடங்களில் இறப்பதில்லை. சிறிதுசிறிதாக நோய்வாய்ப்பட்டு, பின்னர் சிகிச்சையின்போது இறக்கிறார்கள். இதனால், கட்டுமான கான்ட்ராக்ட் எடுத்துள்ள நிறுவனங்களும், இவர்களது மரணத்துக்கு நேரடியாக பதில் கூற வேண்டிய அவசியமில்லை.

Web Design by Srilanka Muslims Web Team