கத்தார் வாழ் இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் ஒன்றியம் - இலங்கை தூதுவருடன் சந்திப்பு » Sri Lanka Muslim

கத்தார் வாழ் இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் ஒன்றியம் – இலங்கை தூதுவருடன் சந்திப்பு

qa66

Contributors
author image

முஸாதிக் முஜீப்

கத்தார் வாழ் இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் ஒன்றியத்தின் (Federation of SriLankan Muslim Associations Qatar) நிர்வாக அங்கத்தவர்களுக்கும் கத்தாருக்கான இலங்கை தூதுவர் மதிப்பிற்குரிய ஏ.எஸ்.பி. லியனகே அவர்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பு கடந்த (15.06.2017) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், கத்தார் வாழ் இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இணைப்புப்பத்திரமும் மதிப்பிற்குரிய தூதுவரால் கையளிக்கப்பட்டது.

இதுவரை கத்தார் வாழ் இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் ஒன்றியத்தில் தங்களையும் பதிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காத கட்டாரில் உள்ள அமைப்புக்கள்/ சங்கங்களின் பிரதிநிதிகள் goo.gl/cKT7Lh எனும் இணைபின் மூலம் பதிவுசெய்து கொள்ளுமாறு பொதுச்செயலாளர்
ரிஸ்லான் பாரூக் வேண்டிக்கொள்கின்றார்.

qa

Web Design by The Design Lanka