கந்தளாயில் வங்கி ஊழியர்கள் உட்பட 09 பேருக்கு கொரோனா தொற்ற உறுதி..! - Sri Lanka Muslim

கந்தளாயில் வங்கி ஊழியர்கள் உட்பட 09 பேருக்கு கொரோனா தொற்ற உறுதி..!

Contributors
author image

Editorial Team

கந்தளாயில் வங்கி ஊழியர்கள் உட்பட ஒன்பது பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். இதைவேளை அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த உள்ளதாகவும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கந்தளாய்-பேராறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியாகத் திருகோணமலை மாவட்டத்தில் அண்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் முகக்கவசங்கள் அணியாதவர்களை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாகப் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேணுமாறும், முகக் கவசங்களை அணியுமாறும் சுகாதார திணைக்கள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team