கந்தளாய் அக்போபுர மகா வித்தியாலய ஆசிரியர்கள், அதிபரினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..! - Sri Lanka Muslim

கந்தளாய் அக்போபுர மகா வித்தியாலய ஆசிரியர்கள், அதிபரினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

Contributors

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் அக்போபுர மகா வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோரினால்  கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுதலை செய்யுமாறும்,சம்பள அதிகரிப்பினை மேற்கொள்ளுமாறு கோரி இன்று(5) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் அக்போபுர சிங்கள மகா வித்தியாலயத்திற்கு முன்னால் இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பில் கைது செய்யப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை விடுதலை செய்வதோடு ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை நிவர்த்திக்குமாறும் கோரியே ஆசிரியர்கள் அதிபரினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பினை வெளியிட்டதோடு,பல வாசகங்கள் தாங்கிய பதாதைகளும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்தார்கள்.

சம இடைவெளி பேணப்பட்டு ஆசிரியர்கள் கவனயீர்ப்பில் கலந்து கொண்டார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team