கந்தளாய் அல் தாரிக் கனிஷ்ட வித்தியாலயத்தில் தளபாட பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை » Sri Lanka Muslim

கந்தளாய் அல் தாரிக் கனிஷ்ட வித்தியாலயத்தில் தளபாட பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை

school1

Contributors
author image

எப்.முபாரக்

கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தி/கந்தளாய் அல் தாரீக் கனிஷ்ட வித்தியாலயத்தில் தளபாடங்கள் பற்றாக்குறை காரணமாக அப்பாடசாலை மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.       

இப்பாடசாலையில் இருநூறிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் அரைவாசி மாணவர்கள் தளபாடங்கள் இன்றி நிலத்தில் இருந்து கல்வி கற்று  வருவதாகவும்,பாடசாலை விட்டு வீட்டுக்கு பிள்ளைகள் வரும் போது ஆடைகள் அழுக்கடைந்த நிலையில் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் முறையிடுகின்றனர்.        

  இவ்விடயம் குறித்து பெற்றோர்கள் அப்பாடசாலையின் அதிபர் ஊடாக கந்தளாய் வலய கல்விப் பணிப்பாளர்,மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் எழுத்து மூலம் அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளையும்,மேற்கொள்ள வில்லையெனவும் பெற்றோர்கள் அங்கலாய்கின்றனர்.      

எனவே இவ்விடயத்தில் கல்வி உயர் அதிகாரிகள் விரைவில் கூடிய கவனம் செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

Web Design by The Design Lanka