கந்தளாய் பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பத்து குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் கையளிப்பு..! - Sri Lanka Muslim

கந்தளாய் பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பத்து குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் கையளிப்பு..!

Contributors
author image

எப்.முபாரக்

கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் பத்து குடும்பங்களுக்கு அல் கிக்மா பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் சுயதொழிலை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரங்கள் இன்றைய தினம்(5) கந்தளாய் பிரதேச சபை வளாகத்தில் வைத்து பயனாளிகளிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரல,கந்தளாய் பிரதேச சபை தவிசாளர் சமன் ஏக்கநாயக்க,அல் கிக்மா பவுண்டேசன் பணிப்பாளர் எம்.ஏ.இபாதத்துள்ளா ,மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் டி.எச்.அசங்க ஆகியோர்  இணைந்து தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team