கந்தளாய் பேரமடு குளம் 118 மில்லியன் ரூபா  செலவில் புனரமைப்பு  ஆரம்பம்..! - Sri Lanka Muslim

கந்தளாய் பேரமடு குளம் 118 மில்லியன் ரூபா  செலவில் புனரமைப்பு  ஆரம்பம்..!

Contributors

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்க்ட்பட்ட  பேரமடு குளம் இன்று(2) புனரமைப்புக்கான அங்குராப்பண நிகழ்வு நடைபெற்றது.

இக்குளம்மானது நீண்டகாலமாகவே  விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யாத நிலையில் காணப்பட்டது.

அப்பகுதி விவசாயிகளும்,விவசாய சங்கங்களும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரலவிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய 118 மில்மியன் ரூபாய் செலவில்  புனரமைக்கப்படவுள்ளது.

இக்குளம் 1974 ம் ஆண்டுகட்டப்பட்டது இதன் சுற்றளவு 2460  ஆகும், விவசாயநிலம்  283 ஏக்கர கொண்டதாகும்.

விவசாயிகளின் நன்மை கருதி அமைக்கப்பட்டுள்ளது,இதன் மூலம் விவசாயிகள் பெரிதும் நன்மையடைவுள்ளனர்.

இந்நிகழ்வில் 

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கலான  நுவன் அத்துகோரள பொலநறுவை பாராளுமன்ற உறுப்பினர்  அமர கீர்த்தி அத்துகோரள  கந்தளாய் பிரதேச தவிசாளர் உட்பட பலரும் கலந்துகொண்டார்கள்.  

Web Design by Srilanka Muslims Web Team