கந்தளாய் பேராறு பகுதியில் மின் விளக்குகளை பொருத்தி தருமாறு கோரிக்கை » Sri Lanka Muslim

கந்தளாய் பேராறு பகுதியில் மின் விளக்குகளை பொருத்தி தருமாறு கோரிக்கை

power cut

Contributors
author image

எப்.முபாரக்

               திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு மேற்கு கிராம முன்னேற்ற பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகள் மின் வெளிச்சமின்றி இருளில் மூழ்கி காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.             

                    பேராறு மேற்கு பகுதியில் இரவு நேரங்களில் மின் கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்தப்படாததால் வெளிச்சமின்றி இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.           

      இதனால் இப்பகுதியில் கோழிகள் மற்றும் ஆடுகள், வீடுகளின் பொருத்தப்பட்டிருக்கும் நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரங்கள் திருடப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

              இது பற்றி கந்தளாய் பிரதேச சபையின் செயலாளர் ,மற்றும் பேராறு மேற்கு கிராம முன்னேற்ற சங்கத்தின் தலைவரிடமும் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லையென பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.                 

    இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

Web Design by The Design Lanka