கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிறந்த சிசுவொன்றினை கொலை செய்து எறித்த குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவர்  கைது - Sri Lanka Muslim

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிறந்த சிசுவொன்றினை கொலை செய்து எறித்த குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவர்  கைது

Contributors

 எப்.முபாரக் 

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிறந்த சிசுவொன்றினை கொலை செய்து எறித்த குற்றச்சாட்டின் பேரில் சிசுவின் தாயொருவரை  இன்று(12)மாலை கைது செய்துள்ளதாக  கந்தளாய்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மத்ரஸாநகர் பேராறு கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிறந்த சிசு பெண் குழந்தையெனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வேறு ஒரு நபருடன் உள்ள தகாத உறவு மூலம் நேற்றிரவு(11) சிசு பிறந்துள்ளதாகவும்,பிறந்த சிசுவினை கொலை செய்து எறித்துள்ள நிலையில் அதனை தெருநாய்கள் கவ்விச் சென்ற நிலையில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சிசுவினை பிரசவித்த பெண்ணைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனார்.

Web Design by Srilanka Muslims Web Team