கனடாவில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டது! - Sri Lanka Muslim

கனடாவில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டது!

Contributors

கனடா நாட்டின் மர்கம் நகரில் உள்ள தெருவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சாதனைகளை போற்றி புகழாரம் சூட்டப்பட்டது.

பின்னர், மர்கம் பகுதியில் உள்ள பிரதான தெரு ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்(அல்லாஹ் – ரக்ஹா ரஹ்மான்) தெரு என பெயர் சூட்டப்பட்டது.அந்த பெருமைக்குரிய பெயர் பலகையுடன் அடக்கமே உருவாக இசைப்புயல் ‘போஸ்’ தரும் காட்சியை படத்தில் காணலாம்.in

Web Design by Srilanka Muslims Web Team