கனடா நாட்டில் விசேட பிரதிநிதி மற்றும் கிழக்கு முதல்வர் சந்திப்பு - Sri Lanka Muslim

கனடா நாட்டில் விசேட பிரதிநிதி மற்றும் கிழக்கு முதல்வர் சந்திப்பு

Contributors
author image

M.S.M.றமீஸ்

கனடா நாட்டில் விசேட பிரதிநிதி ஜவாத் குரோசி இன்று வெள்ளிக்கிழமை  (26.09.2014)கிழக்கு மாகாண முதரமைச்சர் நஜீப் ஏ மஜீதை திருகோணமலையில் அமைந்துள்ள  அவரது பணிமனையில் சந்தித்து விசேட பேச்சு வார்த்தை நடத்தினார்.

 

இச்சந்திப்பில் பிரதானமாக கிழக்கில் போருக்கு பின்னரான நிலமை மக்களின் இயல்பு வாழ்வு மூவின மக்களின் நல்லுறவு குறித்தும் கலந்துரையாடினார்கள்.

 

இதன் போது முதலமைச்சர் கல்வி, சுற்றுலா மற்றும்  கைத்தொழில் துறையினை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் விசேடமாக அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற கைத்தரி (நெசவு)உற்பத்தியை நவீன முறையில் முன்னெடுப்பதோடு ஏற்றுமதி செய்வதற்கான ஒத்தாசைகளை  வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இதற்கு தான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக கனடா பிரதி நிதி தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்குமாகாண சபை முஸ்லிம் கங்கிரஸ் குழுத்தலைவருமான   தலைவருமான   ஏ.எம். ஜெமீலும் கலந்து கொண்டார்.

 

15

 

16

Web Design by Srilanka Muslims Web Team