கன்னித்தன்மை சோதனைக்கு கனடா அரசு தடை - Sri Lanka Muslim
Contributors

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள டாக்டர்களுக்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் என்ற கன்னித்தன்மை சோதனை செய்யும் முறைக்கு அரசு தடை விதித்துள்ளது.

மாண்ட்ரீயல் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவிகள் கன்னித்தன்மை சோதனை செய்து சர்டிபிகேட் வாங்கிவரும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது டாக்டர்களுக்கு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு கன்னித்தன்மை சோதனை தேவையில்லை என்றும் அவர்கள் வெர்ஜினிட்டி சர்டிபிகேட் கொடுக்கும்படி எந்த கல்லூரியும் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அரசு எச்சரித்துள்ளது.

அரசு உத்தரவை மீறி யாராவது கன்னித்தன்மை சோதனையில் ஈடுபட்டால், குறிப்பிட்ட மருத்துவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மத்தியபிரதேச மாநிலத்தில் திருமணத்திற்கு முன் பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யும் வழக்கம் ஒரு பிரிவினர்களுக்கு இருந்து அது அந் நாடு தடைவிதித்தமை குறிப்பிடத்தக்கது

Web Design by Srilanka Muslims Web Team