கம்பஹா - சீதுவை பொலிஸ் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கைது » Sri Lanka Muslim

கம்பஹா – சீதுவை பொலிஸ் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கைது

arrest-slk.polce

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

( ஐ. ஏ. காதிர் கான் )


   கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடமிருந்து 25 ஆயிரம் ரூபா பணத்தை  இலஞ்சமாகப் பெற முயற்சி செய்த, சீதுவை பொலிஸ் நிலைய குற்றப்  பிரிவுப்  பொறுப்பதிகாரி நேற்று முன் தினம் (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

    இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள்,  சீதுவை பொலிஸ் வாகனங்கள் ஒன்று சேர்க்கும் இடத்தில் வைத்து இவரைக் கைது செய்துள்ளனர்.

    குறித்த வியாபாரியினால்  மேற்கொள்ளப்பட்ட  முறைப்பாடு தொடர்பில், குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நபரைக் கைது செய்து, முறைப்பாட்டை மேற்கொண்டவருக்குச்  சாதகமாக விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு, குற்றப் பிரிவுப்  பொறுப்பதிகாரிக்கு இவ்வாறு இலஞ்சப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் விசாரணைப்  பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

    குறித்த சந்தேக நபர் இவ்வாறு இலஞ்சப் பணத்தைப்  பெற்றுக்கொள்ளும்போது, அவரிடம் வெளிநாட்டு மதுபான போத்தலொன்றும் இருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by The Design Lanka