கரடிப்பூவல் பிரதேசத்தில் மிக வறிய நிலைக்குட்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கென ஒரு தொகை உலர்உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு..! - Sri Lanka Muslim

கரடிப்பூவல் பிரதேசத்தில் மிக வறிய நிலைக்குட்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கென ஒரு தொகை உலர்உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு..!

Contributors

எப்.முபாரக் 

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்  தெய்வீக கிராம நிகழ்ச்சி திட்டத்தின்  கீழ் கரடிப்பூவல் பிரதேசத்தில் மிக வறிய நிலைக்குட்பட்ட  04 சமயங்களையும் சேர்ந்த அறநெறி பாடசாலை மாணவர்களின் குடும்பங்களுக்கென ஒரு தொகை உலர்உணவுப்பொருட்கள் இன்று(1) மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவினால் உரிய பிரதேச அறநெறிப்பாடசாலைகளில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில்  உரிய சமயங்களின் சமயத்தலைவர்கள், திருகோணமலை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சனத் குருகுலசூரிய, மாவட்ட இந்து சமய கலாசார உத்தியோகத்தர் ஶ்ரீ.லக்குமிதேவி, கிறிஸ்த்தவ சமய அலுவல்கள் திணைக்களத்தின் பட்டதாரி பயிலுனர் கே.டயானி மற்றும் உரிய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team