கறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு..! - Sri Lanka Muslim

கறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு..!

Contributors
author image

Editorial Team

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களின்  ஊடக வெளியீடு

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கருதப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வழங்கத் தவறியது துன்பகரமானது.

ஜனாதிபதியும், பிரதமரும் ஆரம்பத்தில் இருந்தே அளித்த எதிர்பார்ப்புகள்  சிதைந்து விட்டன என்று அதிமேதகு காதினல் ஒரு ஊகட சந்திப்பில்   கூறினார்.

அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்றாதபோது அழுத்தம் கொடுக்க அவர் செயல்படுத்தும்  கருப்பு ஞாயிறு என்ற போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிப்போம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

ஈஸ்டர் தாக்குதலை அதிகாரத்தை பெறுவதற்காக பயன்படுத்துவது மாத்திரமல்லாது ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஞ்சித் மத்தும பண்டார,

பொது செயலாளர்,

ஐக்கிய மக்கள் சக்தி

Web Design by Srilanka Muslims Web Team