“கறுப்பு ஞாயிறு“ போராட்டத்தில் கைகோர்க்கும் இலங்கை முஸ்லிம்கள் - CTJ ..! - Sri Lanka Muslim

“கறுப்பு ஞாயிறு“ போராட்டத்தில் கைகோர்க்கும் இலங்கை முஸ்லிம்கள் – CTJ ..!

Contributors

04/21 உயிர்த்த ஞாயிறு ஆராதணையில் கலந்து கொண்டிருந்த
 கிறிஸ்தவ சகோதரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு நீதி கோரி கிறிஸ்தவ உறவுகள் நாளை முதல் நடத்தவுள்ள ‘கறுப்பு ஞாயிறு’ போராட்டத்திற்கு இலங்கை முஸ்லிம்களாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ கேட்டுக் கொள்கிறது.

04/21 அன்று நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ சகோதரர்களும் இன்னும் பலரும் கொல்லப்பட்டனர்.
குறித்த தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரனை அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் முதன்மை குற்றாவாளிகள் யார் என்ற விபரங்கள் வெளிப்படுத்தப்பட வில்லை. 
தாக்குதலில் பாரியளவு பாதிப்புக்குள்ளான கிறிஸ்தவ உறவுகள் தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நீதி கோரிக் கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தமக்கு நீதி கிடைக்க வில்லை என அறிவித்துள்ளார்கள்.


பாதிக்கப்பட்டவர்கள் தமது பாதிப்புக்கு நீதி கிடைக்க வில்லை என நம்பும் நிலையில், இருக்கும் ஒரு அறிக்கை நீதியை பெற்றுக் கொடுக்கும் அறிக்கையாக கண்டிப்பாக அமையாது என்பதால் இந்தத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி மற்றும் குற்றவாளிகளை கண்டறிய வேண்டிய கட்டாய நிலை காணப்படுகின்றது.
எனவே கிறிஸ்தவ சகோதரர்களின் இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் “கறுப்பு ஞாயிறு” போராட்டத்திற்கு இலங்கை முஸ்லிம்களாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ வேண்டிக் கொள்கிறது.


ஆர். அப்துர் ராசிக் B.COM

பொதுச் செயலாளர்,

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் –CTJ

06.03.2021

Web Design by Srilanka Muslims Web Team