கற்பதற்கு ஆர்வம் உள்ள மாணவர்களை நாம் ஊக்குவி்க்க வேண்டும் - Sri Lanka Muslim

கற்பதற்கு ஆர்வம் உள்ள மாணவர்களை நாம் ஊக்குவி்க்க வேண்டும் –

Contributors

-புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா-

மாணவர்கள் கற்கும் ஆசையினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் மூலம் சிறந்தவர்களாக மாற முடியும்.கல்வியை கற்பது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அகில  இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்று மாலை பாலாவி காசிம் சிட்டி றிசாத் பதியுதீன் மஹா வித்தியாலயத்தில் இடம் பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலை அதிபர் எம்.நஜ்மி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது –

இன்றை காலம் மிகவும் சோதனைகள் நிறைந்த தொன்றாகவுள்ளது. முஸ்லிம் மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளுடன் ஒழுக்க ரீதியான விழுமியங்களுக்கு முன்னுரிமையளித்து நடக்க வேண்டும். ஒழுக்கமில்லாத கல்வியானது இறைவனுடைய பொருத்தத்தை பெற்றுக் கொள்ளாது. இந்த பாடசாலை மாணவர்கள் விளையாட்டுத் துறையிலும் ,கல்வித்துறையிலும் பல சாததனைகளை படைத்திருப்பதை அதிபர் அவர்கள் கூறியபோது நான் மகிழச்சியடைந்தேன். இந்த பாடசலையில் மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் இரந்து இடம் பெயர்ந்த நிலையில் வாழும் மாணவர்கள் மினவும் புரிந்துணர்வுடன் கல்வி பயிலுகின்றனர்.

கற்பதற்கு ஆர்வம் உள்ள மாணவர்களை நாம் ஊக்குவி்க்க வேண்டும். அவர்களை இன ரீதியாக ,மத ரீதியாக,பிரதேச ரீதியாக பிரித்து பாரக்கக் கூடாது கல்வி என்னும் அறிவுத்தாகத்தை தீர்த்துக் கொள்ள பாடசாலைகளை நாடி வரும் மாணவர்களை நாம் நேசிக்க வேண்டும். இது அதிபரினதும், ஆசிரியர்களினதும் பண்பாக இருக்க வேண்டும்.

எமது இடம் பெயர்வுகளால் நாம் பெரும் பாலானவற்றை இழந்துள்ளோம்.அதனை மதிப்பீடு செய்யும் பணியினை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதற்கு எமது பங்களிப்பினை எல்லோரும் வழங்க வேண்டும். குறிப்பாக  சமூகத்தினை சரியான வழியில் இட்டுச் செல்லம் பொருப்பு மிக்கவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.பிள்ளைகளின் கல்வி விடயத்தில் பாடசாலைக்கு உதவுபவர்களாக இருக்க வேண்டும்.

நாம் வெளியேற்றப்பட்டு வந்த போது புத்தளம் மக்கள் எமக்கு வழங்கிய உதவிகளை இன்றும் எம்மால் மறக்க முடியாது. அம்மக்கள் எம்மிடம் கேட்கும் உதவிகளை நாம் செய்து கொடுப்பது எமது கடமையென கருதுகின்றோம். இடம் பெயர்ந்த மற்றும் உள்ளுர் மாணவர்கள் என்ற பாகுபாடுகள் இன்று களையப்பட்டு நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.இது தான் எமது சமூகத்தின் பலமாகும். என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

152

Web Design by Srilanka Muslims Web Team