கற்பிட்டி தீவுகள் விற்பனையானமை நிரூபிக்கப்படின் உடன் பதவி துறப்பு - லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன - Sri Lanka Muslim

கற்பிட்டி தீவுகள் விற்பனையானமை நிரூபிக்கப்படின் உடன் பதவி துறப்பு – லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

Contributors

கற்பிட்டி பிரதேசத்திலுள்ள 13 தீவுகளை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதாக ஐ.தே.க.வின் கபீர் ஹாஷிம் எம். பி. கூறிய குற்றச்சாட்டு முற் றிலும் உண்மை க்கு புறம்பானது.

இங்குள்ள ஒரு தீவையேனும் வெளிநாட்டிற்கு அரசாங்கம் விற்றது என்பதை கபீர் ஹாஷிம் நாளை (இன்று) இந்த சபையில் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தும் பட்சத்தில் தனது அமைச்சு பதவி மட்டுமன்றி உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகத் தயார் என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் சவால் விடுத்தார்.

அரசாங்கம் எந்த ஒரு தீவையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்வதாக தெரிவித்த அமைச்சர் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், பொய்யானதுமான தகவல்களை கபீர் ஹாஷிம் எம்.பி. கூறி இந்த உயர் சபையை தவறாக வழி நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

வரவு – செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான அறாவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிடுகையில்,

பொய் கூறுவது என்பது ஒரு பாவமான ஒருசெயல், காரியம் என்று புனித அல்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது. எனவே புனித குர்ஆன் கூறும் அடிப்படையிலாவது பொய் கூறாது தனது உரையை கபீர் ஹாஷிம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

வத்தலங்குண்டு பிரதேசத்திலுள்ள தீவு வெளிநாட்டுக்கு விற்பனை செய்துள்ளதாக கூறி மீனவர்களை குழப்பம் அடைய செய்யும் முயற்சியில் அவர் இந்த உரையை நிகழ்த்தியுள்ளார். (thinak)

Web Design by Srilanka Muslims Web Team