கலவர காலத்தில்...!!! (கவிதை) » Sri Lanka Muslim

கலவர காலத்தில்…!!! (கவிதை)

attac.jpg2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


உலமா சபையை
பலமாக விமர்சித்து
ஒரு கூட்டம் மீடியாவில்
உரத்துக் கத்தும்

அமைச்சர் காக்காமாரை
அரைச்சு தூளாக்கி
பதவி விலகென்று
பதறும் மறு கூட்டம்

எல்லாம் தவறுகளும்
எங்கட ஆட்களால்தான்
என்று ஒரு கூட்டம்
ஸ்டேட்டஸ் போடும்.

அட்வைஸ் மழைகள்
வொய்ஸ் கட்டில் கொட்டும்
வட்ஸ் அப்பின் வயிறு
வளரும் கர்ப்பிணி போல்.

ஏற்கனவே அடித்து
இருக்கின்ற குனூத் நோட்டிஸ்
திகதியை மாற்றி
திரும்பவும் வெளியிடப்படும்

பிரதமர் டெலிகிறாமை
பீயோனிடம் கொடுத்து விட்டு
கடமை முடிந்தது
கல்யாணம் வாழ்க என
அறிக்கை விட்டு
ஆறுதல் அடையும்
அரசியல் தலைகள்.

பத்திப் போன கடைக்கு
பாதுகாப்பைப் பலப் படுத்த
சுத்திப் படை நிற்கும்
குத்திப் பேசப் படும்

இரு பக்கக் கட்சிகளும்
எதிர்தரப்பை சாடிய பின்
சங்கிரி லாவில்
சந்தித்து டான்ஸ் ஆடும்

அஞ்சாறு நாட்களில்
அனைத்தும் மறந்து போகும்
எல்லாம் சரி என்று
இருக்கின்ற போதே
இன்னுமொரு காக்கா கடையில்
இலக்ட்ரிக் ஷோட்டாக
முதலிலிருந்து தொடங்கும்
முன் சொன்ன விடயங்கள்

Web Design by The Design Lanka