கலாநிதி யூசுப் அல் கர்ழாவி அஸ்ஹர் பல்கலை கழகத்தின் சிரேஷ்ட அறிஞர்களின் கவுன்ஸிலிருந்து இராஜினாமா - Sri Lanka Muslim

கலாநிதி யூசுப் அல் கர்ழாவி அஸ்ஹர் பல்கலை கழகத்தின் சிரேஷ்ட அறிஞர்களின் கவுன்ஸிலிருந்து இராஜினாமா

Contributors

சர்வதேச இஸ்லாமிய அறிஞரான கலாநிதி யூசுப் அல் கர்ழாவி  எகிப்து  அல் அஸ்ஹர்  பல்கலை கழகத்தின் சிரேஷ்ட அறிஞர்களின் கவுன்ஸிலிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

 

கர்ழாவி தனது முகப்பு நூல் மற்றும் இணையதளத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அல் அஸ்ஹர் பல்கலை கழக இமாம்  எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்ஷி  பதவி கவிழ்க்கப்பட்டது மற்றும் இராணுவ சதிப்புரட்சிக்கு ஆதரவளித்தமை   ஆகியவற்றுக்கு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

அஸ்ஹரின் தலைமை இமாம் சரியான பாதைக்கு திரும்பிவருவார் என்று தான் காத்திருந்ததாகவும்  கலாநிதி யூசுப் அல் கர்ழாவி தெரிவித்துள்ளார்

”நான் எனது இராஜினாமாவை எகிப்து மக்களிடம் சமர்ப்பிக்கிறேன். அவர்கள்தான் அல் அஸ்ஹரின் உண்மையான உரிமையாளர்கள். மாறாக அல் அஸ்ஹர் தலைவரல்ல” என்று கர்ழாவி குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team