கலைஞர்களுக்கான மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு! - Sri Lanka Muslim

கலைஞர்களுக்கான மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு!

Contributors

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் 12 மாத விளக்கு வேலை திட்டத்தின் கீழ் கலைஞர்களுக்கான மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு, வாழைச்சேனை – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை (10) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முஹம்மது, கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.எஸ்.திலிபா, திருமதி.ஜே.ரதிதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள பிரதேச கலைஞர்களுக்கு மூன்று மரக்கன்றுகள் வீதம் மா, கொய்யா, தோடை பழமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team