கலை, கலாசர படைப்புகளை பாதுகாக்க காத்தான்குடியில் கிராமிய கலை வட்டங்கள்! - Sri Lanka Muslim

கலை, கலாசர படைப்புகளை பாதுகாக்க காத்தான்குடியில் கிராமிய கலை வட்டங்கள்!

Contributors

கலாசாரம் மற்றும் கலைஞர்களின் கலைப் படைப்புகளின் பாதுகாப்புக்காக காத்தான்குடியில் கிராமிய கலை வட்டங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதரின் வழிகாட்டலின்கீழ் பிரதேச கலாசார உத்தியோக்கதர் எம்.ஐ.எம். ஜவாஹிர் தலைமையில் கலை வட்டங்களை ஸ்தாபிக்கும் நிகழ்வு இன்று (21) பிரதேசெயலகத்தில் இடம்பெற்றது.

அனைத்து கலாசாரம் மற்றும் கலைஞர்களின் கலைப் படைப்புகளின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும் கிராம மட்டத்தில் கலைஞர்கள் மற்றும் சமுகத்தை அணிதிரட்டுதல் எனும் குறிக்கோளுடன் தேசிய மரபுரிமை, அரங்கக்கலை மற்றும் கிராமிய கலை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு மற்றும் இலங்கை கலைக்கழகம் ஒன்றிணைந்து கிராமிய கலை வட்டங்களை நிறுவும் வேலைத்திட்டத்தினை நாடுபூராகவும் முன்னெடுத்து வருகின்றது.

கிராமப்புரங்களில் ஒதுங்கி இருக்கும் கலைஞர்களின் உண்மையான திறமைகளுக்கு அரச அணுசரணையினை வழங்கி தரமான கலைகளை வளர்ப்பதன் மூலம் உண்மையான கலாசாரத்தினையும், ஒழுக்கமான சமுகத்தினையும் உருவாக்கமுடியும் என நம்பப்படுகின்றது.

இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள கலை இலக்கிய கழகம், இஸ்லாமிய இலக்கிய கழகம் மற்றும் சிறுவர் இல்ல கோலாட்டக் கழகம் என்பன கிராமிய கலை வட்டங்களாக நிறுவப்பட்டன.

இதனூடாக நாட்டார்புற கலை, கவிதை, நடனங்கள், இசை, கலை, நாடகங்கள், தற்காப்புக்கலை, கட்டிடக்கலை, சுதேச மருத்துவம், கைவினை, சிற்பங்கள் உள்ளிட்ட 23 கலை அம்சங்களை பாதுகாக்க இராஜாங்க அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது அபிவிருத்தி உத்தியோகத்தர் சிந்து உசா, கலைஞர்கள், இலக்கியவாதிகள், கலைக்கழகங்களின் உறுப்பினர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team