கல்கிஸை நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு! - Sri Lanka Muslim

கல்கிஸை நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு!

Contributors

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று கொண்டிருந்த போது, உள்நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் எவ்விதமான அனர்த்தமும் ஏற்படவில்லை.

பிரதிவாதி தரப்பை குறிவைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி, நீதிமன்ற விசாரணை கூட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

பிரதிவாதியை நோக்கி, இரண்டு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்தும், துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேகநபர், நீதிமன்றத்திற்குள் மற்றுமொரு துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team