கல்குடாவில் தொடரும் அமீர் அலியின் அபிவிருத்திகள் - Sri Lanka Muslim

கல்குடாவில் தொடரும் அமீர் அலியின் அபிவிருத்திகள்

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

ஓட்டமாவடி 2ம், 3ம் வட்டாரங்களை இணைக்கும் பிரபலமான எல்லை வீதியான மருங்கைக்கேணி (MK) வீதி, கேட்பாரற்ற நிலையில் பல வருடங்களாகக் காணப்படுவதுடன், புனர்நிர்மாணம் செய்யப்படாததின் காரணமாக, இவ்வீதியின் இரு மருங்கிலும் வசிக்கின்ற மக்களும், பாடசாலை மாணவர்களும், இவ்வீதியூடாகப் பிரயாணம் செய்வோரும் மழைக்காலங்களில் பல அசெளகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்..

 

இதனை ஓட்டமாவடி பிரதேசபை உருப்பினர் IT.அஸ்மி அவர்களிடம் அப்பிரதேச மக்கள் முறையிட்டதன் பலனாக அஸ்மி அவர்கள் உடனடியாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாகானசபை உருப்பினருமான MSS.அமீர் அலி அவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

 

இதனை அடுத்து மாகானசபை உருப்பினரான MSS.அமீர் அலி அவர்கள் கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன துறை அமைச்சரான உதுமா லெப்பை அவர்களுடன் இவ்விடயம் சம்பந்தமாக மிகக் கூடிய கவனமெடுத்து கலந்துரையாடியதன் நிமிர்த்தம் வீதி அபிவிருத்தித்திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், முதற்கட்டமாக 43 மீற்றர் நீளத்தில் வீதிக்கு வடிகனுடனான கொங்றீட் இடுவதற்கான வேலைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

அதன் அடிப்படையில் துண்டு துண்டாக செய்வதனாலும் வருவது மழைக்காலம் என்பதனாலும், மழை நீர் அதிகம் தேங்கி நிற்க வாய்புக்கள் அதிகம் என்பதனாலும் மாகான சபை உருப்பினர் அமீர் அலி அவர்களின் வேண்டு கோளுக்கினங்க கொங்றீட் இடுவதனை முழுமையாக நிறுத்தி விட்டு முழு விதிக்குமான வடிகானினை அமைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடிருந்தார்.

 

இதனடிப்படையில் இன்று ஓட்டமாவடி பிரதேசபை உருப்பினர் IT.அஸ்மி அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்ற வடிகானுக்கான அடிக்கல்நடும் விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் ,மாகான சபை உருப்பினருமான MSS.அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு வேலைகளை உடனடியாக ஆரம்பிக்கு முகமாக அடிக்கல்லினை நட்டுவைத்தார். மேலும் இவ்வைபவத்தில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஹமீட் அவர்களும், முன்னாள் தவிசாளர் லெப்பை ஹாஜியார் அவர்களும், அதிகமான பொதுமகளும் கலந்து கொண்டனர்.
 

ameer ali1

 

ameer ali1.jpg2

 

ameer ali1.jpg2.jpg3

 

ameer ali1.jpg2.jpg3.jpg4

 

ameer ali1.jpg2.jpg3.jpg6

Web Design by Srilanka Muslims Web Team