கல்முனைக்குடியில் மா.ச உறுப்பினர் ஆரிப் சம்சுதீனால் இலவச நீர் வழங்கிவைப்பு - Sri Lanka Muslim

கல்முனைக்குடியில் மா.ச உறுப்பினர் ஆரிப் சம்சுதீனால் இலவச நீர் வழங்கிவைப்பு

Contributors

-எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

கல்முனைக்குடி பிரதேசத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் குடிநீர் இணைப்புகளைப் பெற முடியாத வசதியற்ற குடும்பங்களுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் இலவசமாக இன்று குடிநீர் இணைப்புகளை வழங்கி வைத்தார்.

கல்முனைக்குடி பிரதேசத்திலுள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக அண்மையில் அப் பிரதேசங்களுக்கு சென்ற கிழக்கு

மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனிடம் பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து கல்முனை சாகிபு வீதி மற்றும் நகர மண்டப வீதி ஆகியவற்றிலுள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கே இந்த இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச தேசிய நீர்வழங்கல் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எம்.எம்.முனவ்வர் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களின் இணைப்பு செயலாளர் எம்.ஐ.ஜமால் உட்பட பிரதேசவாசிகள் பலர் கலந்து கொண்டனர்.

water 2 water 5 water 6

Web Design by Srilanka Muslims Web Team