கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல் ; இடைக்கால தடையுத்தரவு நீக்கம் - Sri Lanka Muslim

கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல் ; இடைக்கால தடையுத்தரவு நீக்கம்

Contributors
author image

S.Ashraff Khan

கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல் வாகனத்தரிப்பிடம்  அமைப்பதற்கு எதிராக நீதிமன்றினால் வழங்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு இன்று (01) கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதியினால்        நீக்கப்பட்டது.

 

இன்று 01.09.2014 திங்கட்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிராளிகள், வழக்காளிகள் மன்றுக்கு சமூகமளித்து இருந்தனர்.

 

விசாரணைகள் சுமார் 3 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடை பெற்றது.
இறுதியில் மாவட்ட நீதிமன்றமானது கட்டாணையை இடை நிறுத்தியதோடு,வாகன தரிப்பிடம் அமைக்கப்படுமாயின் பள்ளிவாசலின் பழைய மதில் இருக்கும் இடத்தில் இரும்புத் தூண்கள் மற்றும்,சங்கிலிகள் மூலம் மறிக்கப்பட்டு தொழுகை நேரங்கள் மற்றும் பள்ளிவாசலில் நிகழ்வுகள் நடைபெறும் நேரங்களில் மாத்திரம் சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டு மற்றைய நேரங்களில் சங்கிலிகளால் மூடப்பட்டு இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நீதிமன்றமானது இந்த வேலைத்திட்டம் நிறைவடையும் போது நேரடியாக வந்து பார்வையிட்டதன் பின்னர் குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும்  என குறிப்பிடுகிறது.

 

kamunail mosque

Web Design by Srilanka Muslims Web Team