கல்முனைக்கு வழங்கப்படும் பிரதியமைச்சுப் பதவியை தடுக்க புதிய உறுப்பனர் சூழ்ச்சி - Sri Lanka Muslim

கல்முனைக்கு வழங்கப்படும் பிரதியமைச்சுப் பதவியை தடுக்க புதிய உறுப்பனர் சூழ்ச்சி –

Contributors
author image

எம்.சிராஜ்

தேசிய முஸ்லிம் இளைஞர் முன்னணி ஊடக அறிக்கை
கல்முனை பிரதேசத்தின் புத்திஜீவிகளில் ஒருவரான டாக்டர் ஆரிப் கல்முனை மாநகரத்திற்கு பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை தெளிவு படுத்தியதாக மிக நாகரிகமாக வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.

 

உதயம் இணையத்தளத்தை நடத்தும் ஒரு பிரதேசத்தின் மாகாண சபை உறுப்பினர் பிரதேசவாதத்தை வக்கீரமாகக் கொண்டு கல்முனை பிரதேசத்திற்கு பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்படக்கூடாது என்பதுடன் டாக்டர் ஆரிப்பையும் குறித்த இணையத்தளத்தில் விமர்சித்துள்ளார்.

 

கல்முனை மாநகரத்தை நான்கு துண்டுகளாக உடைத்து சின்னாபின்னமாக்குவதற்கு குறிப்பிட்ட பிரதேசத்தின் அமைச்சர் சூழ்ச்சி மேற்கொண்டிருந்தபோதும் தேர்தல் ஆணையாளர் இதனை தடுத்து நிறுத்தியுள்ளார்.

 
கல்முனையில் இருந்த பல அரச அலுவலகங்களை வேறு இடங்களுக்கு இடமாற்றினார்கள். கடந்த பத்து வருடங்களாக பாரிய அபிவிருத்திப் பணிகள் இல்லாமல் காணப்பட்ட கல்முனை மாநகரத்திற்கு மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி சுபிட்சமான எதிர்காலத்தை நோக்கிய பார்வையை ஏற்படுத்தியது.

 

இன்று குறித்த அமைச்சரின் பிரதேசத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கொழும்பில் முகாமிட்டு தலைவவரிடமும், இன்னும் சிலரிடமும் கல்முனை மண்ணுக்கு அதிகாரத்தை வழங்கக்கூடாது என்ற வக்கீரத்தனத்தோடு அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக அறியமுடிகின்றது.

 

கட்சிக்கு புதிதாக வந்து சேர்ந்து பதவி பெற்றவர்கள் இன்று கட்சிக்காக தியாகங்கள் செய்த சிரேஸ்ட உறுப்பினர்களை புறந்தள்ளி ஒதுக்குவதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை கட்சிப் போராளிகள் அங்கீகரிக்கவும் மாட்டார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்து அதனை சமூகத்தின் உரிமைக்குரலாக மாற்றியமைத்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் தாயகத்தை தூக்கி எரிவதற்கு எவருக்கும் இடம்கொடுக்க முடியாது.

 

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க வேண்டும் என்பதை கட்சியின் உயர்பீடக்கூட்டங்களில் மிக அழுத்தமாக குறித்த மாகாண சபை உறுப்பினர் கூறினார். இதற்காக விஞ்ஞான விளக்கங்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்.

இன்று அவர்களின் தீர்மானத்தின்படி கட்சி போயிருந்தால் நமது கட்சியும், போராளிகளும் பாரிய பழிபாவத்திற்குள் உட்பட்டிருப்போம். அல்லாஹ் பெரியவன் அதிலிருந்து எம்மைக் காப்பாற்றியுள்ளான்.

கட்சியின் முடிவுகள் மக்களின் உணர்வுகளை அறிந்து எடுக்கப்படாமல் குறித்த மாகாண சபை உறுப்பினரின் விஞ்ஞான விளக்கத்தோடு ஒன்றித்துப் போயிருந்தால் நமது சமூகமே நம்மைத் தூக்கி எரிந்திருக்கும்.
பிரதேசவாதத்தையே தனது கொள்கையாகக் கொண்ட முன்னாள் அமைச்சரின் வாரிசாக வளந்தவரிடம் வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது. பிரதேசவாதம் அவர்களது இரத்தத்தில் ஊறியது.

கட்சியை ஸ்தாபித்த பெருந்தலைவரையே பார்க்காமல் அவருக்கு எதிராக கொடிபிடித்து, ஆர்ப்பாட்டம் செய்து கூச்சல் போட்டவருக்கு அவரது மண்ணையா மதிக்கப்போகின்றார்.

முஸ்லிம் காங்கிரஸிற்குள் நேற்று வந்து பதவி பெற்றது மட்டுமல்லாமல் சிரேஸ்ட உறுப்பினர்களை ஒதுக்குவதற்காக கீழ்த்தரமான வேலைகளையும் செய்து வருவததைப் பார்க்கின்றபோது கவலையiடைகின்றோம். இந்த விடயத்தில் நமது கட்சிப் போராளிகள் மிகக்கவனமாக இருக்கின்றனர்.நேரத்திற்கு நேரம் கட்சி மாறி பதவிக்காக அல்லுண்டு போகின்ற அந்தப் பிரதேசத்தின் மன்னர்கள்; கட்சியின் உண்மைப் போராளிகளை ஏமாற்ற முடியாது.

கடைசியாக ஒரு விடயத்தைக்கூற விரும்புகின்றோம்.பிரதேச வாதத்தையும்,சுயநல வக்கீர புத்தியையும் விட்டுவிடுங்கள். அது கடைசியில் உங்களுக்கே பரிசாக வந்து முடியும்.அடுத்த பதவியை குறிவைத்து கட்சியை பிளவுபடுத்தாதிர்கள் என்பதை சொல்லிவைக்க விரும்புகின்றோம்.

Web Design by Srilanka Muslims Web Team