கல்முனைத் தேர்தல் தொகுதி UNP அமைப்பாளர் அப்துல் றசாக்கின் விசேட நேர்காணல் » Sri Lanka Muslim

கல்முனைத் தேர்தல் தொகுதி UNP அமைப்பாளர் அப்துல் றசாக்கின் விசேட நேர்காணல்

rasak unp

Contributors
author image

இக்பால் அலி

மன்சூர், அஷ்ரப் ஆகியவாகளைக் கொண்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள இடமாக விளங்கிய கல்முனைத் தேர்தல் தொகுதியில் அவர்களுக்குப் பின்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள மக்கள் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்வதில் இயலாத் தன்மையுடையவர்காளகவும் அரசியலில் முகவரியைத் தொலைத்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

சிறு சிறு கட்சிகளை இப்பிரதேச முஸ்லிம்கள் ஆதரிப்பதன் மூலம் அதனைப் பெற்றுக் கொள்வதில் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் காணும் பகல் கனவாகவே தொடர்ந்து இருக்கப் போகின்றது. எனவே தேசிய அரசியல் கட்சியை ஆதரித்து புதிய மாற்றத்தை உருவாக்குவோம் என்று கல்முனைத் தேர்தல் தொகுதி அமைப்பாளர் சட்;டத்தரணி எம். எஸ் அப்துல் றசாக் அம்பாரை மாவட்ட சமகால அரசியல் கள நிலவரம் தொடர்பாக நவமணிப் பத்திகைக்கு வழங்கிய செவ்வி

நேர்காணல் இக்பால் அலி
நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படத்தப்படுத்துகின்ற நடடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். அது உண்மையா?

ஆம். அதாவது வந்து மறைந்து அமைசர் எம். எச். எம். அஷ்ரப்பிற்குப் பிற்பாடு பின்னர் கல்முனைத் தேர்தல் தொகுதி அரசியல் என்பது தடுமாறி தடமாறிச் சென்று விட்டது. அமைச்சர் அஷ்ரப்பிற்குப் பின்னரான காலப்பகுதியில் கல்முனை அரசியலைக் கொண்டு நடத்த வேண்டிய பரிய பொறுப்பை அம்பாறை மாவட்டத்திற்கு வெளியே வழங்கப்பட்ட போதிலும் அதன் தலைமை தம் பிரதேசம் பற்றிய அக்கறையின்மை தம் பிரதேசத்திற்கு கிடைக்க வேண்டிய வளங்கள் எல்லாம் இல்லாமற் போனதுடன் அரசியல் முகவரியை தொலைத்து விட்டு முற்று முழுதாக வெளியே உள்ள சிறு கட்சிக்குப் பின்னால் சரணாகதி அமைடந்துள்ளோம். இது பற்றி மக்கள் மத்தியில் நாங்கள் தெளிவூட்டலைச் செய்து வருகின்றோம். இன்று இளைஞர் மத்தியிலும் படித்தவர்கள் மத்தியலும் விழிப்புணர்வும் ஏக்கமும் இருக்கிறது. எதிர்காலத்தில் ஐ. தே. கட்சியின் ஊடாக எமது பகுதியில் ஒரு பலமான அரசியல் கட்டமைப்பை உருவாக்கவுள்ளோம்.

உங்கள் அரசியல் பிரவேசம் பற்றி கூறுவீர்களா?
ஆம். அதாவது வந்து உண்மையிலேயே நான் அரசியலுக்கு வர இருக்கவில்லை. ஆனால் நான் வந்து ஆரம்பத்திலேயே ஐ. தே. கட்சி ஆதரவாளர். எனினும் சிறிது காலம் அமைச்சர் எம் எச். எம். அஷ்ரப் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளராகவும் இருந்தேன். அதில் கொண்ட அதிருப்தி காரணமாக விலகியிருந்தேன். ஆன்hல் முன்னால் பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபாவின் காலத்திற்கு முன்னர் இருந்தே ஐ. தே. கட்சயின் அங்கத்தவராக இருந்து வந்துள்ளேன். அது மட்டுமல்ல அம்பாரை மாவட்டத்தின் சட்டச் செயலளராகக் கடமையாற்றியுள்ளேன். இக்கால கட்டத்தில் நேரடியான அரசியலில் ஈடுபட நான் விரும்பவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கையில் எப்படியும் மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடையச் செய்யும் நடவடிக்கையில் எங்கள் பிரதேசத்தில் பல கூட்டங்கள் இடம்பெற்றன. அந்தக் கூட்டங்கள் அனைத்தும் என்னுடைய தலைமையிலேயே இடம்பெற்றது. அந்நேரம் ஐ. தே. கட்சித் தலைவர் ரனில் விக்கிரசிங்க கல்முனை வந்த போது அக் கூட்டத்திற்கும் நானே தலைமை தாங்கி நடத்தினேன்.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்;பு உரிமையை மேலும் வலுப்படுத்திக் கொண்டதற்கு அமையவே நான் மக்களுக்கு காட்டப்பட்டு வந்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் திடீரென அமைச்சர் தயா கமகே என்னுடைய வீட்டுக்கு வந்தார். சுமார் இரண்டு மத்தியாலம் என்னோடு பேசிக் கொண்டிருந்தார். அவரது வரவு என்னைப் பற்றி அறிந்து கொள்வதற்காகத் தான் இவர் வந்தார் என்பதை நான் பின்னர் அறிய முடிந்தது.

அதாவது வந்து அவர் பேசி விட்டுச் சென்ற பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் காசிமிடமிருந்து அழைப்பு வந்தது. அந்தக் காலம் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். அப்போது கபீது காசிம் என்னிடம் கூறினார். முஸ்லிம் காங்கிரஸும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கேட்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக முஸ்லிம் பிரநிதி ஒருவராக தன்னை நிறுத்தவதற்கு கட்சி தீர்மானம் எடுத்துள்ளது அதிலும் ஒரே ஒரு வேட்பாளர் தான் நிறுத்தவுள்ளோம் தன்னைப் போட்டியிடுமாறு அவர் என்னிடம் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் நான் உடனே கூறினேன் எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. அந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் தயாரத்தன , சம்மாந்துரையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஹசன் அலி இருந்தார்கள். அதேவேளை வெளியே எஸ். பி மஜீத் போன்றவர்கள் இருந்தனர். உள்ளே என்னையும் தயாரத்தனவையும் வைத்துத் தான் கதைத்தார். நான் உடனே எனக்கு தேர்தலில் போட்டியிடுமளவுக்கு விருப்பமில்லலை என என்றேன். அப்போது எஸ். பி. மஜீத் வேட்பாளர் அங்கத்துவத்தைக் கேட்டு சண்டை பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நான் அவருக்கு கொடுக்கும்படி கூறினேன். அதற்கு கபீர் காசிம் கூறினார். கட்சித்தான் உங்களைத் தீர்மானித்துள்ளது. நீங்கள் தீர்மானிப்பதில்லை என்று கூறினார்.

நீங்கள் விரும்பம் இல்லை என்று சொல்லுங்கள் அவரை இவரைப் போடுங்கள் என்று நீங்கள் கூற முடியாது என்று அவர் என்னிடம் கூறினார். அதற்குப் பின்னர். சரி என்று சொல்லி விட்டு நான் வந்து விட்டேன். நான் கடைசியாக கட்சியில் ஈடுபடுவதில்லை என்ற எண்ணத்தோடுதான் வந்தேன். அதற்கு பின்னர் தயாகமகே உள்ளிட்டவர்கள் என்னிடம் தொபேசி மூலம் பல விடுத்தம் சம்மதம் கேட்டார். அதற்கு நான் குடும்பத்தவர்களுடன் கதைத்து விட்டுச் சொல்கின்றேன் என்று கூறினேன். அதற்குப் பின்னர் கபீர் காசிம் தொலை பேசியில் அழைப்பு விடுத்தார். அதற்கு எல்லோருடைய விருப்பத்திற்கு இணங்க நான்காவதாக வேட்னு மனுத்தாக்கல் விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டேன். இதற்குப் பின்னர் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கையொப்பம் இட்டனர். இதுதான் என்னுடைய முதல் அரசியல் பிரவேசம் ஆகும்.

கல்முனைத் தேர்தல் தொகுதிக்கு மறைந்த அமைச்சர் ஏ. ஆர். எம். மன்சூரின் மரணம் ஈடு செய்ய முடியாதொன்றாகும். அவர் குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?

முன்னாள் அமைச்சர் ஏ. ஆர், எம். மன்சூரின் மரணம் என்பது உண்மையிலேயே மரண அடக்கஸ்தலத்திற்குச் சென்ற போதுதான் விளங்குகின்றது இன்று முஸ்லிம் மக்கள் எவ்வளவு ஆதங்கத்துடன் இருக்கின்றார்கள் என்று ? ஏனென்றால் அவர் செய்த சேவையின் ஒரு துளி கூட அவருக்குப் பிற்பாடு செய்யப்பட வில்லை என்று நான் நினைக்கின்றேன். ஆனாலும் மறைந்த அமைச்சர் எம். எச். எம். அஷரப் இருந்தாலும் அவர்கள் நாடு முழுக்கச் செய்திருக்கிறார்கள். எனினும் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் கல்முனைக்கு ஏதாவது அபிவிருத்தி செய்யப்பட்டதா என்று பார்த்தால் அது ஏ, ஆர். மன்சூரின் காலத்தில்தான் செய்யப்பட்டுள்ளது. அவர் தேசிய கட்சியைக் கொண்ட அரசாங்கத்தமில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தார். அவ்வாறு தேசிய கட்சியினுடைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருக்கக் கூடிய வசதி வாய்ப்புக்கள் இருந்து இருக்கின்றன.

இது இந்த நாட்டிலுள்ள அரசியல் வரலாறு. உதாரணத்திற்கு கலாநிதி பதியுதீன் முஹ்மூத் அவர்கள் ஸ்ரீமாவோ பண்டார நாயக்க பிரதமராக இருந்த போது கல்வி எழுச்சிக்காக உழைத்தவர் அவர். அதே போன்று ஏ. சீ, எஸ். ஹமீத், எம். எச். முஹம்மத், போன்றவர்கள் நேரடியாக மக்கள் பிரநிதிநிதியாகவும் கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சராகவும் இருந்து பெரும் சேவைகள் ஆற்றியுள்ளனர். ஜனாதிபதி ஆர்,. பிரேமதாசவின் காலத்தில் மன்சூருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கல்முனைக்கு பெரியளவிலான அபிவிருத்திகளைச் செய்துள்ளார்.

இப்போதுள்ள நிலைமை ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் ஆகிய இருவர்களும் அமைச்சர்களாக இருக்கும் வரையிலும் அதாவது அவர்களுடைய கட்சிகளை இங்கு முன்னெடுத்துச் செல்லும் வரையிலும் கல்முனைக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்திற்கோ ஒரு முஸ்லிம் அமைச்சாரை அந்தஸ்துள்ள அமைச்சர் என்றுமே கிடைக்காது. என்பதை நான் அழுத்தமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். அப்படி வந்தாலும் அவர்கள் இரண்டு பேரும் தான் அமைச்சாளாக வருவார்கள்.

நகர அபிவிருத்தி திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் உள்ள அலுவலங்களில் தங்களுiiடைய அலுவலக ஊழியர்களாக ஏ. ஆர். எம். மன்சூரின் புதல்வனைத் தவிர சகலருமே வெளியூரைச் சேர்ந்தவர்களையே அவர் வேலைக்கு அமர்த்தியிருக்கின்றார். மிகவும் முக்கியமான பொறுப்புக்களை இந்தக் கிழக்கு மாகாணத்திலுள்ள வெளியில் உள்ளவர்களுக்கே வழங்கி இருக்கின்றார். அவர் அவ்வாறு தான் கொடுப்பார். அதுதான் மனித இயல்பு. அதே போன்று தான் ரிசாட் பதியுதீன் அவர்களும் அவரும் அதனைத் தான் செய்கின்றார்.

இவர்கள் வந்து இந்தப் பிரதேசங்களை வழிநடத்துவதற்கு உண்மையிலேயே கல்முனை அல்லது அம்பாiரை மாவட்ட முஸ்லிம்கள் என்ற ரீதியில் நாங்கள் வெட்கப்பட வேண்டியவர்கள். ஏனென்றால் நாங்கள் மந்தைகளாகவும் அவர்கள் எங்களை மேய்க்கின்றவர்களாகவும் தொடர்ந்து இருக்கின்றார்கள். இந்த விடயம் எங்களுடைய பிரதேச மக்களுக்கு எப்போது விளங்குகின்றதோ அப்போதுதான் நாங்கள் எங்களுடைய அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் சரி அல்லது வேறுவேறு நடவடிக்கையிலும் சரி நாங்கள் மீட்சி பெறுவோம்.

கல்முனைத் தேர்தல் தொகுதியில் வெற்றிடமாகவுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரை கொண்டு வந்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியுமா?

உண்மையிலேயே அமைச்சர் மன்சூர், அமைச்சர் அஷரப் ஆகியவர்கள் இந்தப் பிரதேசத்திற்கு நிறைய சேவைகள் செய்தார்கள். அதற்குக் காரணம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தமையாகும். முஸ்லிம் காங்கிரஸின் உதயத்தின் பின்னரும் தலைவர் அஷ்ரப் அவர்களுடைய மரணத்திற்குப் பின்னரும் அந்த இடம் இன்னும் வெற்றிடமாகவே இருந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தம்முடைய சேவையை அக்கரைப்பற்றுக்குச் செய்திருக்னகின்றார். அதனை நான் மறுக்கவில்லை. அதனை அவருடைய ஊருக்குச் செய்ய வேண்டும். இருந்தாலும் இப்போதுள்ள அரசியல் கள நிலவரம் அவருக்கும் வர முடியாது. ஏனையவர்களுக்கும் வர முடியாது என்ற வகையில் சின்னக் கட்சிக் காரர்களட இங்கே வந்து எங்களுடைய முகவரிகளை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதில் ஒருவர் மயிலாடுகின்றார்.
இன்னுமொருவர் மரம் வளர்க்கின்றார். இன்னுமொருவர் குதிரையோடுகின்றார் என்கின்ற நிலைமையே இருக்கின்றதே தவிர இவர்கள் இந்த சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி எவ்வாறு இந்த மண்ணுக்குரிய விலாசத்தையும் அபிவிருத்திப் பாதையையும் எடுத்துச் செல்லலாம் என்பதை விட்டு விட்டு அவர்களுடைய அதிகாரப் போட்டிகளுக்காகவே அவர்கள் இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளில் மேற் கொண்டு வருகின்றனர்.

ஆனால் சிறு சிறு கட்சிகள் அவர்களுடைய கட்சியை வளர்ப்பதில் தான் மும்முரமாக இருக்கின்றார்களே ஒழிய மக்களைப் பற்றிச் சிந்திப்பதற்கும் மக்களுடைய அபிவிருத்தி நடவடிக்கைகளை மற்றும் வேலைவாய்ப்பு நடவடிக்கைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கும் அவர்கள் எந்தவிதமான அறிவும் அற்றவாகளாக இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் தேசிய கட்சியில் இணைந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கின்றோம். தேசிய கட்சியின் கனவனத்தை ஈர்த்துக் கொண்டு நாங்கள் மக்களுக்கு இந்த விடயங்களை விளங்கப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி ஊடாக கல்முனைக்கு அல்லது அம்பாரை மாவட்டத்திற்கு அமைச்சரை அந்தஸ்துள்ள அமைச்சரைக் கொண்டு வர இருக்கின்றோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி ரவூப் ஹக்கீம் ரிசாட் பதியுதீன் ஆகியோர் இருக்கும் வரையிலும் இங்கு வரப் போவதில்லை. அவர்கள் தான் எங்களுடைய வாக்குகளைக் கொள்ளையடித்துக் கொண்டு திரும்பத் திரும்ப அமைச்சுப் பதவிகளை எடுத்துச் செல்வார்களே தவிர எங்களுடைய எங்களுக்கு கிடைக்கப் போவதில்லை. அந்த அமைச்சுப் பதவி அவர்களுடைய பிராந்தியத்திற்கே கிடைக்கும். அவர்கள் தான் அதனை முழுமையாக அனுபவிப்பார்களே தவிர அந்தப் பிரதேச மக்களே அனுபவிப்பார்களே தவிர எங்களுடைய பிரதேசத்திற்கு அது எப்போதும் வரப் போவதில்லை. இந்த நிலைமையை நாங்கள் மாற்றியமைக்காத வரைக்கும் எங்களுக்கு அமைச்சரவையுள்ள அமைச்சைப் பெற்றுக் கொள்ள முடியாது. இது எங்களுக்கொரு பகல் கனவாகவே இருக்கும்.

அரசியலில் பரிதாபகரமான நிலைக்கு அம்பாரைப் பிரதேசம் பின்னதள்ளப்பட்டுள்ளதாக கூறும் நீங்கள் இதற்காக நீங்கள் முன் வைக்கினற் மாற்றுக் கருத்து என்ன?

தேசிய ரீதியலான அதாவது சமூக ஒற்றுமையையும் பிரதேச ரீதியலான ஊர் ஒற்றுமையையும் இன ரீதியிலான ஒற்றுமையையும் வளர்ப்பதன் மூலமே எங்களுடைய பிரதேசத்தை நாங்கள் வளப்படுத்த முடியும்;. அது நூநு விகிதம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும். அவ்வாறு இன ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள் ஒரு தேசிய கட்சியின் பால் தான் கொண்டு செல்ல வேண்டும். ஏனென்றால் சிறு சிறு கட்சிகளால் இதனை ஏற்படுத்த முடியாது. இனங்களிடையே முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது. அகில இலங்கை மக்கள் காங்கரஸ் வந்து பிரதேசங்களுக்கிடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது. இந்த நிலையில் தான் அவர்கள் இருக்கின்றனர்.

தேசிய கட்சிகள் ஊடகத்தான் இனங்களிடையேயும் பிரதேசங்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடியவை. எனவே தேசிய ரீதியிலான கட்சிகளுக்குத்தான் பொது மக்கள் இனிமேல் எங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும். இதன் மூலம் தான் இனங்களிடைNயும் எல்லா சமூகங்களிடையேம் முழுப் பிரதேசங்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலம்தான் பிரலதான பெரிய அபிவிருத்திகளை நாங்கள் கொண்டு வர முடியும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தென்கிழக்கு அலகு உட்பட பல அரசியல் ரீதியிலான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. இவை பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்.?

முஸ்லிம் காங்கிரஸ் உருவானதன் பின்னர் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் தனியாதொரு அலகு என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை நிறைவேறாது என்பது அவர்களுக்கே தெரியும் முஸ்லிம்களை உசுப்பேத்தி உணர்ச்சிவசப்படுத்துவதற்காக முஸ்லிம் நாடு போன்ற ஒரு கொள்கையை உருவாக்கி வேண்டுமென்றே இந்த மக்களை ஏமாற்றுகின்றார்கள். பின்னர் அது கைவிடப்பட்டு தென் கிழக்கு அலகு என்ற விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது. தென்கிழக்கு அலகு என்ற விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது தென்கிழக்கிற்கு வெளியே இருப்பவர்கள் இதைப் பற்றி யோசித்தார்கள்.

உதாரணமாக மட்டக்களப்பில் இருப்பவர்கள் தென்கிழக்கிற்குள் வரவில்லை. தென் கிழக்கிற்குள் உள்வாங்கப்பட வில்லை. அதே போன்று திருகோணமலையிலுள்ளவர்கள் தென்கிழக்கிற்குள் உள்வாங்கப்பட வில்லை. வடகிழக்குகளுக்கு வெளியே இருப்பவர்களெல்லாம் இந்த அலகுக்குள் உள்வாங்கப்பட வில்லை. இது எவ்வாறு சாத்தியமான விடயம் என்று அவர்களே யோசிக்கின்ற வகையில் இந்த தென்கிழக்கு அலகு முன்னெடுக்கப்பட்டது. ஆனால் முன்னெடுத்தவர்களுக்குத் தெரியும் ஒரு தென்கிழக்கு அலகு ஒன்று கிடைக்கப் போவதில்லை என்று. ஆனாலும் மக்களுக்னு ஒரு விடயத்தை முன்நிறுத்தித்தான் அவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வருவார்கள். அவ்வாறு முன்நிறுத்தப்பட்ட அந்த சொற்பதத்தில் இந்த தென்கிழக்கு அலகு என்பது ஒன்றாக இருந்தது.

பின்னராகன காலங்களில் அதுவும் கைவிடப்பட்டு அதுவும் கரையோர மாவட்டம் என்ற ஒரு விடயத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளார்கள். அது இதுவரைக்கும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. கையோர மாவட்டம் என்பது பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களால் ஒரு தடவை பேட்டி யொன்றில் சொல்லப்பட்டது கரையோரம் மாவட்டம் அம்பாரைக்கு கிடைக்காவிட்டால் நான் பதவியை இராஜனாமாச் செய்வேன் என்று கூறியுள்ளார். ஆனால் நான் நினைக்கின்றேன் அவர் இப்போதே இராஜினாமாவைச் செய்யலாம். ஏனெ;றால் அவ்வாறு ஒன்று கிடைக்கப் போவதில்லை. அது உண்மையாக் கிடைத்தால் அது முஸ்லிம்களுக்கு எவ்வளவு பாதிப்பு என்பதை அறிந்திருந்தால் அவர் கேட்கவே மாட்டார்.

அவ்வாறான ஒரு பாதிப்பான விசயம் அது. இவர்கள் இவைகளை விட்டுவிட்டு அவர்கள் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகலும் , மாகாண முதல் அமைச்சாகளாகவும் மாகாண அமைச்சர்களாகவும் எத்தனையோ பதவிகளை வகிகத்துக் கொண்டு அம்பாரைக்கு ஒரு முஸ்லிம் மாவட்டச் செயலாளர் ஒருவரைக் கொண்ட வர இவர்களால் முடியவில்லை. உண்மையில் அவ்வாறு கொண்டு வந்தால் இந்தச் சகல பிரச்சினைகளுக்குரிய உணர்வுதான் மக்கள் மத்தியிலே ஏற்படும். முஸ்லிம்கள் பெருமிதம் அடைவார்கள்

வடக்கில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளுக்கு தமிழ் மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அம்பாரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு முஸ்லிம் மாவட்டச் செயலாளர் வர வேண்டிய இடம் அம்பாரையாகும். அவ்வாறு வரவேண்டும் என்றால் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற மாவட்டம் அம்பாரை. இந்த அம்பாரைக்கு முஸ்லிம் மாவட்டச் செயலாளர் ஒருவரைக் கொண்டு வர முடியவில்லை என்றால் இவர்களுடைய அரசியல் அதிகாரம் என்ன?
இவர்களுடைய அரசியல் நிர்வாகங்கள் என்ன ? என மக்களால் கேள்விக்கு உட்படுத்த வேண்டிய விடயங்கள்.

இப்பிராந்த்தியத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள உறவு நிலை முஸ்லிம் காங்கிரஸ் தோற்றத்திற்கு முன்னர் எவ்வாறு இருந்தது.?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதயத்திற்கு பின்னர் தான் பல புதிய சிங்கள இனவாத அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. முஸ்லிம் காங்கிரஸ் உருவான கால கட்டம் பயங்கரவாதப் பிரச்சினையான கால கட்டம். அந்தப் பயங்கரவாதக் கால கட்டத்தில் முஸ்லிம்கள்; தமிழர்களால் இடையிடையே தாக்கப்பட்டார்கள். அவ்வாறு தாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்தக் கட்சி உருவானது. அவ்வாறு அந்தப் பயங்கரவாதிகளுடைய தாக்கங்களை தமிழர்கள் எங்களை தாக்குகின்றார்கள் என்ற இன உணர்வு ஊட்டப்பட்ட நிலையில் தோற்றம் பெற்றது தான் முஸ்லிம் காங்கிரஸ். அந்த இன உணர்வு இன்னும் இருந்து கொண்டு இருக்கிறது. சிங்களவாகளைப் பார்த்தாலும் இன உணர்வோடும் தமிழர்களைப் பார்த்தாலும் இன உணர்வோடும் அதே இன உணர்வு எங்கள் முஸ்லிம் மக்களுக்கு ஊட்டப்பட்டன.

இதே இன உணர்வு இன்று விரிசல் அடைந்து எல்லா இன மக்கள் மத்தியிலும் காணப்படுகின்றன.
இந்த நிலைமையை மீண்டும் இலங்கையில் இது ஒரு ஜனநாயக நாடு, ஒரு அமைதியான நாடாக மாற்றி அமைக்கப்பட வேண்டியிருக்கின்ற இந்தக் கால கட்டத்தில் இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் எனில் இந்தச் சிறு சிறு கட்சிகளை வளப்படுத்துவதன் மூலம் முடியாத காரியமாகும். ஏனென்றால் தேசிய ரீதியில் நாங்கள் வாக்களிக்கின்ற போது உதாரணமாக ஐக்கிய தேசிய கட்சியை முஸ்லிம் மக்கள் அதிகமாக நம்புகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கின்ற போது சிங்கள மக்களும் வாழ்க்களிப்பார்கள், அதே போன்று தமிழ் மக்களும் வாக்களிப்பார்கள். ஆனால் முஸ்லிம் காங்கிஸ் கட்சிக்கு முஸ்லிம்களைத் தவிர வேறு எவரும் வாக்களிக்கப் போவதில்லை.

இவ்வாறு தேசிய ரீதியிலான கட்சிகளுக்கு வாக்களித்தல் வேண்டும். அது ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம் அல்லது ஸ்ரீ. சு. கட்சியாக இருக்கலாம். இந்தக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தலாம். இதனைத் தான் நாம் கட்டாயம் செய்ய வேண்டும்.

அந்த வகையில் நான் கல்முமனைத் தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் கிடைத்த பிற்பாடு தமிழ் பிரதேசங்களில் பல கூட்டங்களை நடத்திக் கொண்டு வருகின்றேன். பாண்டிருப்பு, மனைச்சேனை, நற்பட்டிமுனை, நீலாவணை உள்ளிட்;ட தமிழ் பகுதிகளில் தமிழ் மக்களைச் சந்தித்து பல கூட்டங்களை நடத்தி வருகின்றேன். இதே போன்று முஸ்லிம் பகுதிகளிலும் கூட்டங்களை நடத்தி வருகின்றேன்.
எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவை வளர்க்க ஒரு முக்கியமான பங்கை வகிப்பேன் என்று உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன். இவ்வாறான சிறு கட்சிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம் பிரதேசங்களிலேயே ஒரு ஊரான் இன்னுமொரு ஊராப் பகைக்கின்ற அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகள் சிறு சிறு கட்சிகளினால் உருவாக்கப்பட்டுள்ளன.

இன்று கல்முனை சாய்ந்தமருதுக்கிடையே ஒரு பாரிய விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. புதியதொரு நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.; அதாவது நானா நீயா என்ற போட்டியும். அவர்களிடையே நான் முந்தியா நீ முந்தியா என்ற போட்டியும் நிலவுகின்ற அவர்களுடைய இந்த அரசியல் நடவடிக்கைகளினால் சாதாரணமான மிகவும் புரிந்துணர்வோடு வாழுகின்ற பொது மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்துமளவுக்கு இந்த சிறு கட்சிக்காரர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

கல்முனைத் தேர்தல் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் என்ற வகையில் இப்பிராந்தியத்தில் எத்தகைய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றீர்கள்?

நான் வந்து அபை;பாளர் பதவியை பாரம் எடுக்கும் போது கிட்டத் தட்ட 15 அமைச்சர்கள் அருகில் இருந்தார்கள். நான் வந்து அந்தப் 15 அமைச்சர்களிடமும் கதைத்திருக்கின்றோம். எங்கள் பிரதேசத்தில் நடக்கின்ற அரசியல் கள நிலவரம் குறித்து அவர்களிடம் கூறியுள்ளேன். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து எமது சமூகம் எந்தளவுக்கு பின்தள்ளப்பட்டிருக்கின்றது என்பதை தெளிவுபடுத்தியிருக்கின்றோம். எனினும் ஐக்கிய தேசியக் கட்சி பின்தள்ளப்பட்டிருந்த போதிலும் இவர்கள் வந்து எதைச் செய்கின்றார்கள் என்கின்ற விடயங்களை எல்லாம் கூறியிருக்கின்றேன்.

இதில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் ரவூப் ஹக்கீமும், ரிசாட் பாதியூதீனும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திக் கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு நிறையச் செய்கின்றார்கள் என்றுதான் ஏனைய சமூகத்தினர் நினைத்தக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் இங்கே வந்து பார்த்தால் தான் நன்கு விளங்கும் இவர்கள் இருவரும் எவையும் செய்வதில்லை என்று. அவர்கள் அவர்களை வளப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்களே தவிர முஸ்லிம் சமூகத்திற்கு எவையும் செய்யவும் இல்லை. முஸ்லிம் சமூகத்திற்கு இடையே பிரச்சினைகளை உண்டு பண்ணுகின்றார்கள். எனவே இந்த சூழ்நிலையில் நாங்கள் பல அமைச்சர்களைச் சந்தித்து இந்த விடயங்களை நாங்கள் கூறியிருக்கின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணிமிக்க அமைச்சர்கள் எல்லோரையும் நன் சந்தித்திருக்கின்றேன். அம்பாரை மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன். அந்த பிரச்சினைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்று கூறியிருக்கின்றோம்.
அந்த வகையில் அவர்கள் சகல உதவிகளையும் செய்வோம் என்று சில வாக்குறுதிகள் எமக்கு வழங்கியிருக்கின்றார்கள். அமைச்சர் சஜீத் பிரேமதாசவைச் சந்தித்துள்ளேன். குறிப்பாக அவர் கல்முனையில் ஒரு வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்கு அவர் ஒரு வாக்குறுதி அளித்துள்ளார்.

அவர் இடங்களை இனம் காணும்படி கூறியுள்ளார், அது ஒரு பாரியதொரு அபிவிருத்தி திட்டம். அதே போன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கொரள அவர்களைச் சந்தித்துள்ளேன். அதன் போது கல்முனையில் இருந்து அம்பாரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை மீண்டும் இந்த அலுவலகத்தைத் தர வேண்டும் என்று பல முறை வற்புறுத்தியிருந்தோம். அவர் மீண்டும் தருவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

மேலும் ஏனைய அமைச்சர்களையும் சந்தித்திருக்கின்றோம். அவர்களுடைய அமைச்சின் ஊடாக இப்பிரதேசத்திற்கு எத்தகைய அபிவிருத்தி முன்னெடுப்புக்களைச் செய்ய வேண்டுமோ எதிhகாலத்தில் செய்தற்கு தயாராக இருக்கின்றோம்.

Web Design by The Design Lanka