கல்முனையில் உலக குருதிக் கொடையாளர் தினம் அனுஷ்டிப்பு! - Sri Lanka Muslim

கல்முனையில் உலக குருதிக் கொடையாளர் தினம் அனுஷ்டிப்பு!

Contributors

உலக குருதிக் கொடையாளர் தினம் நேற்று (14) செவ்வாய்க்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர்  இரா. முரளீஸ்வரன் தலைமையில் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 6 வருட காலங்களில் வைத்தியசாலையில் குருதியை தானமாக வழங்கிய சுமார் 100 பேர் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்விற்கு, பிரதம அதிதியாக கிழக்குமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி மூத்ததம்பி கோபாலரத்தினம் கலந்து சிறப்பித்தார்.

மேலும், அவர் செயலாளராக பதவி உயர்வு பெற்றமையை முன்னிட்டு கௌரவிப்பு நிகழ்வும் அங்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக எகெட் நிறுவன பணிப்பாளர்  வண. பிதா ஏ.ஜேசுதாசன் , பிரபல தொழிலதிபர் சொர்ணம் கூட்டு நிறுவன பணிப்பாளர் எம்.விஸ்வநாதன் , வைத்திய நிபுணர்கள் , வைத்திய அதிகாரிகள் தாதிய பரிபாலகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team