கல்முனையில் கட்டாக்காலி மாடுகளுக்கு தண்டப்பணம் அறவீடு » Sri Lanka Muslim

கல்முனையில் கட்டாக்காலி மாடுகளுக்கு தண்டப்பணம் அறவீடு

kalmunai

Contributors
author image

Aslam S.Moulana

கல்முனை நகரில் கைப்பற்றப்பட்ட 14 கட்டாக்காலி மாடுகளும் தலா 2500 ரூபா வீதம் தண்டப்பணம் அறவிடப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை நகரில் அநாதரவாக நடமாடிய நிலையில் 14 கட்டாக்காலி மாடுகளும் கல்முனை மாநகர சபையினால் கைப்பற்றப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தன. இவையே இன்று புதன்கிழமை உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டு, விடுவிக்கப்பட்டதாக கல்முனை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அஹ்சன் தெரிவித்தார்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட மாடுகளை, அவற்றின் உரிமையாளர்கள் தமது சொந்த இடங்களில் வைத்து பராமரிக்க வேண்டும் எனவும் அதனை மீறி அவை மீண்டும் பொது இடங்களில் நடமாடி பிடிபட்டால் தண்டப்பணத்திற்கு மேலதிகமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Web Design by The Design Lanka