கல்முனையில் சில வீதிகளில் இரவு மின் விளக்குகள் எரியாததால் மக்கள் அசௌகரீகம் - Sri Lanka Muslim

கல்முனையில் சில வீதிகளில் இரவு மின் விளக்குகள் எரியாததால் மக்கள் அசௌகரீகம்

Contributors
author image

Editorial Team

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது ஜமாஹிரியா வீதி, ஒராபிபாஷா வீதி, காரியப்பர் வீதி ஆகிய வீதிகளின் கரையோரத்தை அண்டிய பிரதேசங்களிலும் கடற்கரை வீதியிலும் இரவு வேளையில் மின் விளக்குகள் அடிக்கடி எரியாமல்  உள்ளதனால் பிரதேசவாசிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

 

சாயந்தமருது கரையோரப் பிரதேச மக்கள் கடற்றொழிலை பிரதான தொழிலாக செய்து வரும் நிலையில் இரவு வேளைகளில் துார இடங்களிலிருந்து கடற்கரைக்கு வருகை தருகின்றபோது இருள் சூழ்ந்து காணப்படுவதால் கடற்றொழிலாளர்களும் பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

 

அன்றாடத் தேவைகள் நிமிர்த்தம் அயல் கிராமங்களான பாண்டிருப்பு, காரைதீவு பிரதேங்களிலுள்ள தமிழ் சகோதரர்களும் இந்த கடற்கரை வீதியை இரவு வேளைகளில் பயன்படுத்தி வருகின்றனர். மேற்குறித்த இரு ஊர்களுக்குமான இலகு போக்குவரத்து ஊடகமான கடற்கரை வீதியில் இவர்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய  நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

 

மின் விளக்குகள் எரியாமல் இருப்பதனால் இரவு வேளைகளில் நாய்கள், விச ஜந்துக்களின் நடமாட்டமும் இப்பிரதேசங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றது. மட்டுமல்லாது திருடர்களின் தொல்லை, போதைவஸ்துக்கள் பாவனையும் இப்பிரதேசத்தில் அதிகமாக இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, குறித்த பிரதேசத்தின் மின் விளக்குகளை தொடர்ச்சியாக ஒளிரச் செய்யவேண்டிய பொறுப்பு கல்முனை மாநகர சபைக்கு உண்டு. இதுவிடயத்தில் கல்முனை மாநகர முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team