கல்முனையில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவுக்கு தீவைப்பு..! - Sri Lanka Muslim

கல்முனையில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவுக்கு தீவைப்பு..!

Contributors

நூருள் ஹுதா உமர்

கல்முனை கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் நேற்று அதிகாலையும் இனம் தெரியாதோரால் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீயிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த முச்சகரவண்டி முற்றாக தீயில் கருகி நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றுறு அதிகாலை 1.30 மணியளவில் நடைபெற்றிருக்க கூடும் என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். உரிமையாளர் இரவில் தன்னுடைய வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது போன்று கடந்த காலங்களிலும் இரு தீவைப்பு சம்பவங்கள் இந்த பிரசேத்தில் நடைபெற்றிருந்ததும், கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team