கல்முனையில் போதை பொருள் விற்ற 375 பேருக்கு சட்ட நடவடிக்கை - Sri Lanka Muslim

கல்முனையில் போதை பொருள் விற்ற 375 பேருக்கு சட்ட நடவடிக்கை

Contributors

கல்முனை கலால் திணைக்களத்தினால் இவ்வருடம் ஜனவரி தொடக்கம் நவம்பர் மாதம் வரை சட்ட விரோத மதுபானம், போதைவஸ்து விற்பனை என்பவற்றில் ஈடுபட்ட 375 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை கலால் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.ரி.குமார், உதவி பொறுப்பதிகாரி நியூட்டன் அவுஸ்கோன் தலைமையிலான பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத கஞ்சா, சாராயம், சிகரட், கள் என்பன விற்பனை செய்தவர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிணங்க 6 இலட்சத்து 11 ஆயிரத்து 920 ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.(vidi)

Web Design by Srilanka Muslims Web Team