கல்முனை கிரீன் பீல்ட் தொடர்மாடி குடியிருப்பில் இனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் 3 மோட்டார் சைக்கிள், 5 துவிச்சக்கர வண்டிகள் எரிந்து நாசம்! » Sri Lanka Muslim

கல்முனை கிரீன் பீல்ட் தொடர்மாடி குடியிருப்பில் இனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் 3 மோட்டார் சைக்கிள், 5 துவிச்சக்கர வண்டிகள் எரிந்து நாசம்!

Contributors
author image

Farook Sihan - Journalist

இனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் 3 மோட்டார் சைக்கிள் உட்பட 5 துவிச்சக்கர வண்டிகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறின் பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பில் சனிக்கிழமை (16) அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோரினால் வீட்டுத்தொகுதியின் முன்னால் தரித்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் என்பனவைகளே இத்தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டது.

மேலும், இத்தாக்குதலினால் பாதிப்புக்குள்ளான இடத்தில் மின்சார மின்மானிகள் சேதமடைந்த போதிலும், மின்கசிவு ஏற்படவில்லை.

மேலும், இவ்வீட்டுத்திட்டக் குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப்பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமில் தலைமையில் பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு வருகை தந்து முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வீட்டுத்தொகுதியில் இனந்தெரியாத நபர்களில் சிலர் திடீரென உட்புகுந்து இத்தீயினை வைத்து விட்டு, தப்பிச் சென்றதாக குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.

FB_IMG_1602925291248

FB_IMG_1602925288795

Web Design by Srilanka Muslims Web Team