கல்முனை சந்தைத் தொகுதியும், காவலன் ஹரீசும்..! - Sri Lanka Muslim

கல்முனை சந்தைத் தொகுதியும், காவலன் ஹரீசும்..!

Contributors

1982 ஆம் ஆண்டு மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் முன்னாள் அமைச்சர் அவர்களினால் அனுராதபுரத்திலுள்ள HDFC வங்கியில் கடன் எடுத்து தற்போதைய கல்முனை சந்தை கட்டப்பட்டது.

அச்சந்தையின் வங்கிக்கடன் முற்றாக ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அச்சந்தைக் கட்டிடத்துக்கான பெறுமானத் தேய்வு கழிக்கப்படவில்லை. அக்கட்டிடம் திருத்தியமைக்கப்படவுமில்லை. இது General Audit டுக்கு முறையிடப்படவேண்டிய விடயம்.

40 வருடம் பழைமையான அக்கட்டிடம் எலும்பும் தோலுமான பராமரிப்பற்ற கறவை பசுமாடுபோல ஈவு இரக்கமற்ற பட்டிக்காறனுக்கு பால் கொடுத்துக்கொண்டே இருக்குக் கின்றது. வருட வருமானம் 4.0 மில்லியனுக்கு மேல்.

2004 ஆம் ஆண்டு பதுளையில் இருக்கும் பெறுமான மதிப்பீட்டு திணைக்களம் Valuvation Department கல்முனை சந்தை கடைகளின் வாடகைகளை கூட்டி அப்போது கல்முனையில் ஆணையாளராக இருந்த ஜனாப் சலீம் அவர்களுக்கு பட்டியல் அனுப்பியது. அப்போது காவலன் காங்கிரஸை விட்டு வெளியேறி அதாவுல்லாவுடன் சேர்ந்து தேர்தல் கேட்டு மாவடிப்பள்ளி வளவுக்குள் மறைந்திருந்து இரண்டு தோணியில் கால்வைத்து தோல்வியடைந்தார்.அதனால் அக்காலத்தில் அதிஸ்டவசமாக கல்முனையில் எம்.பி.இல்லை.

Valuvation Department தீர்மானித்த வாடகையை யாராலும் மாற்ற முடியாது என சகலரும் கைவிரித்தனர். அல்லா உதவியால் முயற்சி செய்தேன் ஒரு கட்டிடத்திற்கு 22 வருடங்கள் பெறுமானத்தேய்வு காலம். பெறுமானம் இல்லாத, கடன் கட்டி முடித்த கட்டுமானத்திற்கு எவ்வாறு வாடகையை கூட்டலாம் என கேட்டு கௌரவ அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்களூடாக பதுளை பெறுமான மதிப்பீட்டு திணைக்களத்திற்கு எழுதினே. வாடகையை குறைத்து பட்டியல் அனுப்பினார்கள். அல்ஹம்துலில்லா.

இது 2004ல் நடந்த விடயம். தற்போது 18 வருடங்கள் கடந்து
40 வருடம் பழைமையான அச்சந்தை பகுதி பகுதியாக பேந்து விழுகின்றது. மழைகாலத்தில் சேறும் சகதியுமாக காட்சி தருகின்றது. பெறுமானமே இல்லாத அதற்கு தற்போது வாடகையை கூட்டி அறவிடுவதாக பலரும் வேதனைப்படுகின்றனர்.

எந்த நேரத்திலும் வியாபாரிகளுக்கும், நுகர்வோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தவிருக்கும் பெறுமானமில்லாத கல்முனை சந்தையின் கண்டிசன் றிப்போடை கட்டிடத் திணைக்களத்திடமிருந்து பெற்று அதை வைத்து வாடகை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வுகாணலாம்.

விரும்பியவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.

ஹாஜி நஸீர்

Web Design by Srilanka Muslims Web Team