கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் நிவாரணப்பணி..! - Sri Lanka Muslim

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் நிவாரணப்பணி..!

Contributors

நூருல் ஹுதா உமர்

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயணத்தடை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கழக வீரர்களுக்கும் உலருணவுகள் வழங்கும் நிகழ்வு கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழக  ஏற்பாட்டில் இன்று (18) மாலை கல்முனையில் நடைபெற்றது.

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழக தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.ஏ காதர் தலைமையில் நடைபெற்ற மூன்றறை இலட்சம் பெறுமதியான இந்த உலருணவுகள் வழங்கும் நிகழ்வில் கழக தவிசாளர் முனைமருதவன்  அல்ஹாஜ் எம்.எச்.எம். இப்ராஹிம், கல்முனை மாநகர சபை உறுப்பினரும், கழக பொதுச் செயலாளருமான எம்.எச்.எம்.அப்துல் மனாப், பொருளாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். பாரூக், கழக இணைப்பாளர் எம்.எச்.எம்.எச்.எம். அக்கில் உட்பட பலரும் கலந்துகொண்டு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலருணவுப்பொதிகளை இதன்போது வழங்கி வைத்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team