கல்முனை நீதவான் முன்னிலையில் மொழி பெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் ஆசிரியை றினோஸா - Sri Lanka Muslim

கல்முனை நீதவான் முன்னிலையில் மொழி பெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் ஆசிரியை றினோஸா

Contributors

நூறுல் ஹுதா உமர்

சம்மாந்துறை சது/அல்-அர்ஸத் மகா வித்தியாலய ஆங்கிலப்பாட ஆசிரியை திருமதி ஏ.பீ.பாத்திமா றினோஸா நீதி அமைச்சினால் நடாத்தப்படும் பரீட்சை தேர்வின் படி வழங்கப்பட்ட நியமனத்தின் பிரகாரம் 2021.03.25 ம் திகதி கல்முனை மாவட்ட நீதவான் இஸ்மாயில் பயஸ் றஸாக் முன்னிலையில் மொழி பெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் தனது ஆசிரியர் சேவையை மூதூர் உமர் பாறூக் வித்தியாலயத்திலும் பின்னர் வரிப்பத்தான்சேனை லீடர் ஜூனியர் பாடசாலையிலும் சேவையாற்றியதுடன் தனது இளமாணிப் பட்டத்தினை ஆங்கில மொழி மூலமும் பட்டப்பின் கல்வியினை கொழும்பு பல்கலைக்கழகத்திலும், மேலும் மனித உரிமைகள் டிப்ளோமா, உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மற்றும் ஆங்கிலத்தில் தேசிய சான்றிதழினையும் பெற்றதுடன் தனது உயர் தரத்தினை சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team