கல்முனை பள்ளிவாயல் வீதியை மாற்றக்கோரி தமிழர்களும் பிக்குமாரும் ஆர்ப்பாட்டம்! - Sri Lanka Muslim

கல்முனை பள்ளிவாயல் வீதியை மாற்றக்கோரி தமிழர்களும் பிக்குமாரும் ஆர்ப்பாட்டம்!

Contributors

பேரணியில் இடம்பெற்றவர்களின் கருத்துக்கள் இங்கு செய்தியாக தரப்பட்டுள்ளது.

 

கல்முனை வாழ் தமிழர்களினால் தரவை பிள்ளையார் வீதியினை கடற்கரை பள்ளிவாசல் வீதியாக மற்றுவதனை எதிர்த்து அமைதி பேரணி ஒன்று இன்று காலை கல்முனையில் நடைபெற்றது.

 

பல நூறு ஆடு கால வரலாற்றை கொண்ட கல்முனை தரவை பிள்ளையார் ஆலயத்துக்கு எதிரில் செல்லும் வீதியினை தரவை பிள்ளையார் ஆலய வீதி என்று காலகாலமாக இருந்து வருகின்றது. இதனை சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் இனவாத தனமான போக்கினால் இவ்வீதியின் பெயரினை கடற்கரை பள்ளிவாசல் வீதி என்று மற்ற முற்பட்டு கல்முனை மாநகர சபையிலும் விவாதத்துக்கு எடுத்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு விட்டது.

 

இப்பெயர் மாற்றமானது தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிப்பதும், பெயரினை மாற்றி தமிழர் பிரதேசங்களை கபளீகரம் செய்வது புலப்படுகின்றது.

 

இச் செயற்பாட்டின் மூலம் கல்முனைத் தமிழர்கள் தமது இருப்பிடங்களையும் காணிகளையும் பாதுகாத்துக் கொள்ள தமிழர்கள் தனியான பிரதேச சபை கோருவதில் எவ்வித தவறும்மில்லை என்ற கருத்து பொதுவாக கூறப்பட்டது.

 

இவ் ஆர்பாட்டத்தில் கல்முனை இந்து ஆலய பிரதம குருக்களும், கல்முனை விகரதிபதியும், கிருஸ்தவ பாதிரியார் ஆகியோரினால் இவ் எதிர்ப்பு ஆர்பாட்டத்தின் மகஜர்கள் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளர், கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் கையளிக்கப்பட இருந்தது. மாநகர மேயர் இல்லாததினால் அவர்க்கான பிரதியினை மாநகர ஆணையாளரிடமும், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் இல்லாததினால் உப செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

 

இவ் எதிர்ப்பு பேரணி பல தடங்கல்களுக்கு மத்தியில் செய்து முடித்துள்ளதாக ஆர்பாட்ட ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர். அத்துடன் கலந்து கொண்ட அனைத்து உணர்வாளர்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

 

இருந்தது. மாநகர மேயர் இல்லாததினால் அவர்க்கான பிரதியினை மாநகர ஆணையாளரிடமும், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் இல்லாததினால் உப செயலாளரிடம் கையளிக்கப்பட்டது

kalmunai_protest

kalmunai_protest1

kalmunai_protest10

kalmunai_protest11

kalmunai_protest2

kalmunai_protest3

kalmunai_protest4

kalmunai_protest5

kalmunai_protest6

kalmunai_protest7

kalmunai_protest8

kalmunai_protest9

Web Design by Srilanka Muslims Web Team