கல்முனை பிரதேச செயலகத்தில் கெளரவிக்கப்பட்ட 97 வயது மூதாட்டி! - Sri Lanka Muslim

கல்முனை பிரதேச செயலகத்தில் கெளரவிக்கப்பட்ட 97 வயது மூதாட்டி!

Contributors

உலக சிறுவர்,முதியோர் தினத்தை முன்னிட்டு, கல்முனை சமூர்த்தி பிரதேச அமைப்பின் எற்ப்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகள், கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில், இன்று (01) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி முன்னிலையில், நற்பிட்டிமுனையை சேர்ந்த கலந்தர் உம்மா (97வயது) உட்பட மேலும், இதன் போது கல்முனையை சேர்ந்த நெய்னா முகம்மது (86வயது), மருதமுனை யை சேர்ந்த பி.எம்.ஹிசாம் மதார் (73வயது) ஆகிய முதியோர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

அத்துடன் கல்முனை பிரதேச செயலக பிரிவில், சமுர்த்தி உதவி பெறும் மிகவும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திலிருந்து, தெரிவு செய்யப்பட்ட 31 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், கல்முனை சமாதன பாலர் பாடசாலை மாணவர்களின் நடனம் இடம்பெற்றது. மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, கல்முனை சமூர்தி வங்கி முகாமையாளர் மோசஸ் புவிராஜ், நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியின் முகாமையாளராக எம்.ஏ.எம்.பைசால், மருதமுனை சமூர்தி வங்கி வலய முகாமையாளர் ஏ.எல்.எம்.நஜீப், பிரதேச செயலக பிரதம நிர்வாக உத்தியோகத்தர் எம்.என். றம்சான், கல்முனை சமூர்தி வங்கி வலய உதவி முகாமையாளர்களான யூ.எல்.தௌபீக், ஐ.எல்.அர்சுத்தின், பீ.எம்.இஸ்ஹாக், சிரேஷ்ட சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், என்.எம்.நௌசாத், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.ஹஸ்பியா பீவி, அபிவிருத்தி உத்தியோகத்தர் எ.சுசந்த, கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவுகளுக்கு பொறுப்பான சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்கள், முதியோர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team