கல்முனை மக்களுக்கு பிரதேச அரசியல் தரப்பினர் வரலாற்றுத் துரோகம் இழைத்து விட்டனர். -முன்னாள் அமைச்சர் மன்சூர் விசனம் - Sri Lanka Muslim

கல்முனை மக்களுக்கு பிரதேச அரசியல் தரப்பினர் வரலாற்றுத் துரோகம் இழைத்து விட்டனர். -முன்னாள் அமைச்சர் மன்சூர் விசனம்

Contributors

-எம்.எம்.ஏ.ஸமட்-

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வெள்ளி விழாவுக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனா வருவதைத் தடுத்ததன் மூலம் பிரதேச மக்களுக்கு பிரதேச அரசியல் அதிகாரத் தரப்பினர் வரலாற்றுத் துரோகம் இழைத்து விட்டனர்.

இவ்வாறு முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சரும் முன்னாள் கல்முனைத் தொகுதி பராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆர்.மன்சூர் விசனம் தெரிவித்தார்.

தற்போது கொழும்பில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் மன்சூர் இது குறித்த தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

கல்முனைப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மாத்திரமின்றி, அம்பாறை மாவட்டத்தின் நீலாவணை முதல் பொத்துவில் பிரதேசம் வரை வாழும் சகல இன மக்களுக்கும் சேவையாற்றி வரும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஸ்தாபகரான நான் அரசியல் அதிகாரம் இல்லாத நிலையிலும் மக்களின் சுகாதார நலன்களுக்காக, இவ்வைத்தியசாலையின் சேவையினை மேலும் தரம் உயர்த்துவதற்காக இன்றும் பாடுபட்டு வருகின்றேன்.

அந்த வகையில் இவ்வைத்தியசாலையின் நிர்வாகம் வைத்தியசாலையின் வெள்ளி விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக முன்னெடுப்பதற்காக என்னை அனுகி உதவி கோரியபோது என்னால் முடிந்த உதவிகளை வழங்குவேன் என வாக்குறுதியளித்தேன்.

அதன் நிமித்தம் இன்று 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருந்த இவ்வைத்தியசாலையின் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை அழைத்து வருவதற்கான சகல முற்சிகளையும் மேற்கொண்டிருந்த வேளை, சுகாதார அமைச்சரை இப்பிரதான வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் எனத் தற்போதைய கல்முனையின் அரசியல் அதிகாரத் தரப்பினர் தடுத்துள்ளனர்.

இதன் காரணமாக மூலம் இவ்வெள்ளி விழா நிகழ்ச்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரின் ஊடாக இவ்வைத்தியாசாலையின் சேவையை மேலும் தரமுயர்த்தி- இப்பிரதேச மக்களுக்குச் சிறப்பான சுகாதார சேவைiயைப் பெற்றுக் கொடுப்பதற்கான பல முன்மொழிவுகளை சுகாதார அமைச்சரிடம்; முன்வைத்து- அதற்கு அவர் சம்மதமும் தெரிவித்திருந்த வேளை அவரின் வருகை சமூக நலன்களற்றவர்களினால் தடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இவர்கள் இப்பிரதேச மக்களுக்குக் கிடைக்கவிருந்த சிறந்த சுகாதார சேiவையினைத் தடுத்த வரலாற்றுச் சாதனையைப் புரிந்துள்ளனர்.

இந்நடவடிக்கையானது அவர்களுக்கு வெற்றிப் பெருமிதமாகத் தெரிந்தாலும்- அது இப்பிரதேச மக்களுக்கு இவர்களால் இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகமாகவே நான் கருதுகிறேன்.

எனது 17 வருட அரசியல் அதிகார வரலாற்றில் மக்களுக்குக் கிடைக்கவிருந்த எந்தவொரு நன்மையையும் நான் தடுத்ததில்லை.

ஆனால், இன்றுள்ள அரசியல் அதிகாரத்தரப்பினர் தங்களது அரசியல் செல்வாக்கு குறைந்துவிடும் என்ற அச்சம் காரணமாக அவர்களது அரசியல் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாற்றுக் கட்சிக் காரர்களாளோ அல்லது வேறு நபர்களாளோ அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

மக்களுக்குக் கிடைக்கும் நன்கைகைளத் தடுத்து நிறுத்துவதன் ஊடாக இத்தகையவர்கள் எதைச் சாதிக்கப் போகிறார்கள் என வினவ விரும்புவதாகவும் முன்னாள் அமைச்சர் மன்சூர் தனது ஆதங்கத்தை மேலும் வெளிப்படுத்தினார்.

Web Design by Srilanka Muslims Web Team