கல்முனை மற்றும் சாய்ந்தமருது கிராமங்கள் இணைகின்றன! - Sri Lanka Muslim

கல்முனை மற்றும் சாய்ந்தமருது கிராமங்கள் இணைகின்றன!

Contributors

-எஸ்.அஷ்ரப்கான்-

கல்முனை மற்றும் சாய்ந்தமருது கிராமங்களை இணைக்கும் பொருட்டு 2 கோடி ரூபா செலவில் இரு பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

மிக நீண்ட காலத் தேவையாக இருந்த இப்பாலங்களின் அவசியம் பற்றி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், நீர்ப்பாசன அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவிடம் விடுத்த வேண்டுகேளை அடுத்தே இவ்விரு பாலங்களும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

கல்முனை கிரீன் பீல்ட் மற்றும் சாய்ந்தமருது வொலிவேரியன் ஆகிய இரு கிராமங்களையும் இணைக்கும் இவ்விரு பாலங்களினது நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

நீர்ப்பாசன அமைச்சு இதற்காக 2 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு முன்னர் இது நடைபாதை பாலமாகவே இருந்து வந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

தற்போது நிர்மாணிக்கப்படும் இப்பாலத்தினால் விவசாயிகளும், பொதுமக்களும் நன்மையடையவுள்ளனர்.

இவ்விரு பாலங்களின் நிர்மாணப் பணிகள்; பூர்த்தியானதும் இவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

2013-12-13 14.51.122013-12-08 13.25.042013-12-13 14.48.49

Web Design by Srilanka Muslims Web Team